பிரபல ரஷ்ய ஊடக ஜோதிடர் ஒருவர் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் மரண திகதியை கணித்துள்ளதுடன், அவரது ஆட்சி மிக விரைவில் முடிவுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய ஊடக பிரபலம் Alexander Kantonistov என்பவர், கடந்த பல மாதங்களாக ரஷ்யா தொடர்பில் தமது கணிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
உக்ரைன் மீதான போர் தொடங்கி ஒரு மாதம் கடந்த நிலையில், உள்ளூர் ஊடகம் ஒன்றில் பேசிய அவர்,
ரஷ்ய மக்களின் வாழ்வாதாரம் இனி வரும் நாட்களில் மிகக் கடினமாக மாறும் எனவும், நாடு தனிமைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும், ஏப்ரல் மாத மத்தியில் ரஷ்ய துருப்புகள் உக்ரைனை விட்டு வெளியேறும் சூழல் உருவாகும் என்றார்.
ஆனால், அவரது கணிப்பின் இரண்டாவது பாதி மட்டும் இதுவரை நிறைவேறவில்லை. ரஷ்ய மக்கள் கடுமையன சூழலை எதிர்கொள்வதும், நாடு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதும் நிறைவேறியது.
மேலும், கோடை காலம் முடிவதற்குள் ரஷ்ய ஜனாதிபதி புடின் விஷம் வைத்து கொல்லப்படலாம் எனவும் Alexander Kantonistov குறிப்பிட்டுள்ளார்.
ஜூன் மாதம் முதல் விளாடிமிர் புடினுக்கு கெட்ட காலம் துவங்குகிறது என குறிப்பிட்டுள்ள அவர், இந்த நாட்களில் அவருக்கு விஷம் அளிக்க முயற்சிகள் நடக்கலாம் அல்லது உடல் ரீதியான தண்டனை வழங்கவும் சூழ்ச்சிகள் நடக்கலாம் என்றார்.
மட்டுமின்றி, உளவியல் பாதிப்பு காரணமாக புடின் எடுக்கும் முடிவுகள் நாட்டிற்கு பாதிப்பாக முடியும் எனவும் Alexander Kantonistov குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு ஆதரவளிக்கும் உடன் இருப்பவர்களையே புடின் சந்தேகத்துடன் அணுக நேரிடும் எனவும், அதுவே அவருக்கு வினையாக முடியும் என்றார் Alexander Kantonistov.
ஜனாதிபதி மாளிகையில் வைத்தே விளாடிமிர் புடினின் மரணம் இருக்கும் என குறிப்பிட்டுள்ள அவர்,
அவர் வாழ்க்கையின் முக்கிய கட்டமாக கருதப்படும், எதிர்வரும் ஆகஸ்டு முதல் செப்டம்பர் வரையான காலகட்டத்தில் அது நடந்தேறும் என்றார்.
இதனிடையே, விளாடிமிர் புடின் இதுவரை ஐந்து முறை கொலை முயற்சியில் இருந்து தப்பியுள்ளதாக சமீபத்தில் தகவல் ஒன்று வெளியானது.
மட்டுமின்றி, உக்ரைன் மீதான போர் அறிவித்த பின்னரும் அவர் மீது கொலை முயற்சி முன்னெடுக்கப்பட்டு, அதில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.