கவுகாத்தி : அசாமில் கன மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை வெறுங்காலுடன் நடந்து சென்று நிவாரண நடவடிக்கைகளை பார்வையிட்ட பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு, சமூக வலைதளங்களில் பாராட்டு குவிகிறது.வடகிழக்கு மாநிலமான அசாமின் கச்சார் மாவட்ட துணை கலெக்டர் கீர்த்தி ஜல்லி.அசாமில் சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தில், 30 பேர் பலியாகி உள்ளனர்.
இதில் கச்சார் மாவட்டம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. தீவு போல காட்சிஅளிக்கும் இம்மாவட்டத்தில் ஏராளமானோர் வீடுகளை இழந்து, உணவின்றி தவித்து வருகின்றனர்.இவர்களை துணை கலெக்டர் கீர்த்தி ஜல்லி நேரில் சந்தித்து உரிய நிவாரணங்களை வழங்க உத்தரவிட்டு உள்ளார்.பல இடங்களில் கீர்த்தி ஜல்லி வெறுங்காலுடன் சேற்றில் நடந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். நீர் சூழ்ந்த இடங்களில் படகில் சென்று, மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க உத்தரவிட்டார். மக்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார்.இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. ‘அரசு அதிகாரி என்றால் கீர்த்தி ஜல்லி போல இருக்க வேண்டும்’ என, ‘நெட்டிசன்’கள் புகழ்ந்து வருகின்றனர்.
Advertisement