2021 கேரள அரசு விருதுகள் அறிவிப்பு : சிறந்த நடிகர் பிஜூமேனன், சிறந்த நடிகை ரேவதி

2021ஆம் வருடத்திற்கான 52வது கேரள அரசு விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகராக பிஜூ மேனன் மற்றும் ஜோஜி ஜார்ஜ், சிறந்த நடிகையாக ரேவதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த படமாக ஆவாஷ் வியூஹம் படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

விருது பெற்றவர்கள் முழு விபரம் வருமாறு :

சிறந்த திரைப்படம் – ஆவாஷ் வியூஹம்
இரண்டாவது சிறந்த திரைப்படம் – நிஷித்தோ மற்றும் சவிட்டு
சிறந்த நடிகர் – பிஜு மேனன் (ஆர்க்காரியாம்) மற்றும் ஜோஜு ஜார்ஜ் (மதுரம், ப்ரீடம் பைட் துறமுகம் மற்றும் நாயாட்டு)
சிறந்த நடிகை – ரேவதி (பூதகாலம்)
சிறந்த இயக்குனர் – திலீஷ் போத்தன் (ஜோஜி)
சிறந்த குணச்சித்திர நடிகர் – சுமேஷ் மூர் (கள)
சிறந்த குணச்சித்திர நடிகை – உன்னிமாயா பிரசாத் (ஜோஜி)
பிரபலமான மற்றும் அழகியல் மதிப்பு கொண்ட சிறந்த திரைப்படம் – ஹிருதயம்
சிறந்த குழந்தைகள் திரைப்படம் – கடகாலம்
சிறந்த கதை எழுத்தாளர் – ஷாஹி கபீர் (நாயாட்டு)
சிறந்த திரைக்கதை எழுத்தாளர் – கிரிஷாந்த் ஆர்.கே (ஆவாஷ் வியூஹம்)
சிறந்த திரைக்கதை (அசல்) – ஸ்ரீகுமரன் தம்பி (நாயாட்டு)
சிறந்த திரைக்கதை (தழுவல்) – ஷியாம் புஷ்கரன் (ஜோஜி)
சிறந்த குழந்தை நட்சத்திரம் (ஆண்) – நிறைய தத்தகளுள்ள மரம் படத்திற்காக மாஸ்டர் ஆதித்யன்
சிறந்த குழந்தை நட்சத்திரம் (பெண்) – தல படத்திற்காக சினேகா அனு
சிறந்த இசையமைப்பாளர் (பாடல்கள்) – ஹேஷம் அப்துல் வஹாப் (ஹிருதயம்)
சிறந்த பாடகர் – பிரதீப் குமார் (மின்னல் முரளி)
சிறந்த பெண் பாடகி – சித்தாரா கிருஷ்ணகுமார் (காணேக்கனே)
சிறந்த இசையமைப்பாளர் (பின்னணி இசை) – ஜஸ்டின் வர்கீஸ் (ஜோஜி)
சிறந்த பாடலாசிரியர் – பி கே ஹரிநாராயணன் (கடகாலம்)
சிறந்த படத்தொகுப்பாளர் – மகேஷ் நாராயணன் மற்றும் ராஜேஷ் ராஜேந்திரன் (நாயாட்டு)
சிறந்த ஒளிப்பதிவாளர் – மது நீலகண்டன் (சுருளி)
சிறந்த ஒலி வடிவமைப்பு – ரங்கநாத் ரவி (சுருளி)
சிறந்த ஒலி கலவை – ஜஸ்டின் ஜோஸ் (மின்னல் முரளி)
சிறந்த நடன இயக்குனர் – அருண் லால் (சவிட்டு)
சிறந்த ஒப்பனைக் கலைஞர் – ரஞ்சித் அம்பாடி (ஆர்க்காரியாம்)
சிறந்த ஆடை வடிவமைப்பாளர் – மெல்வி ஜே (மின்னல் முரளி)
சிறந்த கலை இயக்குனர் – ஏ வி கோகுல்தாஸ் (துறமுகம்)
சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் – ஆண்ட்ரூ டி'க்ரஸ் (மின்னல் முரளி)
ஜூரியின் சிறப்புக் குறிப்பு – ஜியோ பேபி (பிரீடம் பைட்)

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.