ஆரோக்கியமான உடல் அமைப்பே ஒரு மனிதனின் இன்றியமையாத சொத்து. ஆரோக்கியமான உணவை எடுத்தக்கொள்ளும்பொது உடல் எவ்வித நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும். அந்த வகையில் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய பலன் தருவதில் நெல்லிக்காய்க்கு முக்கிய இடம் உண்டு.
நெல்லிக்காய் ஊட்டச்சத்துக்களின் களஞ்சியம் என்று சொல்லலாம். வைட்டமின் சி-அதிகம் உள்ள நெல்லிக்காயை தினசரி உணவில் தூள், சாறு, தேநீர் போன்ற வடிவங்களில் சேர்த்துக் சேர்த்துக்கொள்வது இன்றியமையாத பலனை கொடுக்கும். நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் பன்மடங்கு இருப்பதை அறிவியலும் ஆயுர்வேதமும் உறுதி செய்கின்றன.
இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் ஆலோசகர் ரூபாலி தத்தா கூறுகையில், நெல்லிக்காய் தினசரி எடுத்துக்கொள்ளும் போது 46 சதவிகிதம் வரை வைட்டமின் சி கிடைக்கும். இது ஃப்ரீ ரேடிக்கல்களின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளிலிருந்து உங்களைப் பாதுகாக்க உதவுகிறது. இது வயதான செயல்முறையை மெதுவாக்க உதவுகிறது மற்றும் கொலாஜன் உற்பத்திக்கு தேவைப்படுகிறது. எனவே உங்கள் தோல், முடி ஆரோக்கியமாக வைத்து நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்கிறது,” என்று கூறியுள்ளார்.
நெல்லிக்காயின் இந்த நன்மைகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு, உங்கள் அன்றாட உணவை ஒரு சுவையான மாற்றும் தனித்துவமான நெல்லிக்காய் வைத்து சட்னி தயாரிக்கலாம். இது நெல்லிக்காய் நல்லெண்ணைக் கொண்டு செய்யப்படும் மிகச்சிறந்த சட்னி. இந்த முறையில் தினமும் ஒவ்வொரு உணவிலும் நெல்லிக்காயை சேர்க்க முடியும். இந்த விரைவான மற்றும் எளிதான அம்லா சட்னி செய்முறையை செஃப் அனாஹிதா தோண்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
5 நிமிட நெல்லிக்காய் சட்னி செய்வது எப்படி?
நெல்லிக்காய் சட்னி செய்முறையில், உணவின் சுவையை அதிகரிக்க, புதிதாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் சீரகப் பொடியையும் பயன்படுத்தலாம் நிச்சயமாக, இதில் சாப்பாட்டிற்கு ஏற்ப உப்பு மற்றும் சர்க்கரையைப் சேர்க்க வேண்டும்.
முதலில் நெல்லிக்காயை கழுவி சிறு துண்டுகளாக நறுக்கவும். பிறகு, கொத்தமல்லி தவிர அனைத்து பொருட்களையும் ஒரு கிரைண்டரில் சேர்த்து, மிருதுவான பேஸ்டாக அரைக்கவும். கொத்தமல்லியை சேர்த்து, தேவைப்பட்டால் ஐஸ்-குளிர்ந்த தண்ணீரில் கலக்கவும்.
அவ்வளவுதான். ஐந்து நிமிடங்களில் சுவையான நெல்லிக்காய் சட்னி ரெடி எங்கள் மதிய உணவு மற்றும் இரவு உணவுகளுடன் பரிமாறலாம்.