காதலுக்கு கண், வயது என எதுவுமே இல்லை என்பார்கள். ஆனால் அந்த கூற்றுக்கு தகுந்தவாறு வெகுசிலரே தங்களது காதலை தேர்ந்தெடுப்பார்கள்.
அப்படி காதலிப்பவர்கள் பல சமயங்களில் விமர்சனங்களை சந்திப்பதும் வழக்கம். ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தங்களுடைய காதலில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். அப்படிப்பட்ட காதல் ஜோடி எப்போதும் ஆச்சரியத்துக்கு உட்பட்டது.
அப்படி ஒரு ஜோடி இத்தாலியில் இருக்கிறது.. இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் 19 வயதுடைய இளைஞர் கியூசெப் டி’அன்னா. இவர் டிக்டாக் பிரபலம் ஆவார். இவரை டிக் டாக்கில் 1,90,000 பேர் ஃபாலோ செய்கின்றனர்.
தொடர்ந்து வீடியோக்களை டிக்டாக்கில் பதிவு செய்யும் கியூசெப் கடந்த மே 24-ஆம் தேதி தனது டிக் டாக் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அந்த வீடியோதான் இப்போது உலகளவில் பிரபலமாகி இருக்கிறது.
அந்த வீடியோவில், கியூசெப் 76 வயதுடைய பெண்ணை காதலிப்பதாக தெரிவித்து இருவரும் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார்.
மேலும் படிக்க | Monkeypox: குரங்கு அம்மை சமூக பரவலாக மாறக் கூடிய அபாயம் உள்ளது; எச்சரிக்கும் WHO
அதுமட்டுமின்றி தாங்கள் இருவரும் காதலிப்பதாகவும் நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாகவும் கூறியிருந்தார். இதனையடுத்து இருவரது புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது. அவர்களுக்கு பலரும் தங்களது வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்தனர்.
அதேசமயம் விமர்சனமும் எழுந்தது. கியூசெப் பணத்திற்காக மட்டும்தான் 76 வயதுடைய பெண்ணை காதலிக்கிறார் என்று பலர் அந்த வீடியோவின் கீழ் பதிவு செய்திருந்தனர்.
மேலும் படிக்க | கிரேக்க எண்ணெய் கப்பல்களை கைப்பற்றி பதிலடி கொடுத்த ஈரான்: அதிகரிக்கும் பதற்றம்
இதனை எதிர்பார்க்காத கியூசெப் பதிலளிக்கையில், நான் அவரை உண்மையாக காதலிக்கிறேன். எங்களது காதல் மிகவும் அழகானது. நிச்சயதார்த்தமும் செய்துவிட்டோம்” என பதிவிட்டிருந்தார். அவரது பதிலுக்கு பலரும் தங்களது வரவேற்பை அளித்தனர்.
19 வயது இளைஞர் 76 வயது பெண்ணை காதலித்து அவருடன் நிச்சயதார்த்தத்தை முடித்திருக்கும் சம்பவம் இத்தாலி மட்டுமின்றி உலகம் முழுவதும் பாராட்டை பெற்றுவருகிறது. மேலும், காதலுக்கு கண்ணும், வயதும் இல்லை என்ற கூற்றுக்கு கியூசெப்தான் வாழும் உதாரணம் என நெட்டிசன்கள் அந்த வீடியோவை அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR