Russia Ukraine News: கூகுள் உள்பட 7 டெக் நிறுவனங்களுக்கு அபராதம் – ரஷ்யா செஞ்ச காரியத்த பாருங்க!

Russia Ukraine News: தகவல் தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் மக்கள் ஊடகங்களின் மேற்பார்வைக்கான ரஷ்யாவின் ஃபெடரல் சர்வீஸ் (
Roskomnadzor
), கூகுள் (Google), ஏர்பிஎன்பி (Airbnb), பீண்டெரஸ்ட் (Pinterest), லைக்மீ (Likeme), ட்விட்ச் (Twitch), ஆப்பிள் (Apple), யுனெடெட் பார்சல் செர்வீஸ் (United Parcel Service Inc) உள்ளிட்ட வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளது.

தனிப்பட்ட தரவு சட்டங்களை மீறியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ரஷ்யாவில் உள்ள ஒரு தரவுத்தளத்தில், ரஷ்ய பயனர்களின் தனிப்பட்ட தரவைச் சேமிக்காததற்காக அரசு ஏற்கனவே கூகுள் நிறுவனத்துக்கு சுமார் 36 லட்சம் ரூபாய் (3 மில்லியன் ரூபிள்) அபராதம் விதித்தது.

Elon Musk: எலான் மஸ்க் போட்ட ஒரு பதிவில் ஆடிப்போன ட்விட்டர்!

டெக் நிறுவனங்கள் மீது கண் வைக்கும் ரஷ்யா

ரஷ்ய சட்டத்தை மீண்டும் கூகுள் மீறியுள்ளதால் புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக Roskomnadzor தெரிவித்துள்ளது. Roskomnadzor இன் கூற்றுப்படி, அவர்கள் குற்றவாளிகள் என்று நிரூபணம் ஆனால் இந்திய மதிப்பில் பல கோடிகளை அபராதமாக செலுத்த வேண்டியிருக்கும்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து பல டெக் நிறுவனங்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறின. இந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை அமெரிக்காவுடன் தொடர்பு கொண்டவை.

Russia Ukraine News: போர் காலத்தில் உக்ரைன் மக்களுக்கு உறுதுணையாக இருக்கும் 5 ஆப்கள்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் பல தடைகளுக்குப் பிறகு, அமெரிக்க, லண்டன் ஆகிய பிராந்தியங்களின் நிறுவனங்கள் ரஷ்ய சந்தையில் இருந்து வெளியேறி வருகின்றன.

அப்படி எளிதாக நாட்டை விட்டு வெளியேற ரஷ்யா அனுமதிக்காததே தற்போதைய பிரச்னை. அவர்கள் புறப்படுவதற்கு முன்பு அவர்களிடமிருந்து முடிந்தவரை அபராதத்தை விதித்து, நிதி திரட்ட ரஷ்ய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் ரஷ்யாவில் உள்ள எந்த உள்கட்டமைப்பையும் இழக்க நேரிடலாம்.

Mark Zuckerberg: பேஸ்புக் மார்க் கைது? டெக் துறையில் பரபரப்பு!

கூகுளுக்கு எதிராக நடவடிக்கை

கூகுள் நிறுவனத்திற்கு எதிரான அமலாக்க நடவடிக்கைகளை ரஷ்யா தொடங்கியுள்ளது. கூகுள் நிறுவன தளங்களில் “ரஷ்ய தடை செய்யப்பட்ட உள்ளடக்கத்தை நீக்க நிறுவனம் பலமுறை மறுத்ததால்”, ரஷ்யா அதற்கு எதிராக வழக்கு தொடரப்போவதாக அறிவித்தது.

கூகுளின் ஆண்டு வருமானத்தில், 5% விழுக்காடு வரை அபராதம் விதிக்க ரஷ்யா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யூடியூப்பில் இருந்து தடை செய்யப்பட்ட உள்ளடக்கத்தை அகற்ற மறுத்ததற்காக ரஷ்ய நீதிமன்றம் கூகுளுக்கு 3 மில்லியன் ரூபிள் அபராதம் விதித்தது.

Bill Gates: தல… என்ன போன் வெச்சிருக்கார் தெரியுமா – ஆனா சத்தியமா நீங்க நெனச்சது இல்ல!

ரஷ்யாவால் தடைசெய்யப்பட்ட உள்ளடக்கத்தை அகற்றத் தவறியதற்காக இந்த மாத தொடக்கத்தில் கூகுளுக்கு 11 மில்லியன் ரூபிள் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வீடியோ பகிர்வு தளத்தில் “போலிகளை பரப்பியதற்காக” கூகுளை தண்டிக்கும் நடவடிக்கைகளில் தாங்கள் செயல்பட்டு வருவதாக ரஷ்யாவின் தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்

மாஸ்கோவில் உள்ள டாகன்ஸ்கி மாவட்ட நீதிமன்றம், நிர்வாக மீறல்களில் கூகுள் குற்றவாளி என்று இந்த மாதம் அறிவித்தது. மேலும் நிறுவனத்திற்கு முறையே 4 மில்லியன் மற்றும் 7 மில்லியன் ரூபிள் அபராதம் விதித்துள்ளதாக தனியார் செய்தி நிறுவனம் ஒன்றும் தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.