TNPSC Group 2 Answer Key: டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 ஆன்சர் கீ வெளியீடு; செக் செய்வது எப்படி?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 5,529 பணியிடங்களுக்கான குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வு மே 21 அன்று நடைபெற்றது. 11,78,000 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் சுமார் 9.94 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். தேர்வு முடிவு ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

இதில், முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

இந்நிலையில், தேர்வில் சில வினாக்கள் பிழையாக கேட்கப்பட்டதாக தகவல் பரவியது. இதுகுறித்து விளக்கமளித்த டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன், குரூப் 2, 2ஏ தேர்வில் கேட்கப்பட்ட எந்த கேள்வியும் தவறானவை அல்ல. தேர்வுக்கான தற்காலிக ஆன்சர் கீ விரைவில் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி, குரூப் 2, 2ஏ தேர்வுகளின் தற்காலிக ஆன்சர் கீ http://www.tnpsc.gov.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

உத்தேச விடைக்குறிப்பில் ஆட்சேபனைகள் இருப்பின், ஒருவார காலத்துக்குள் இணைய வழியில் மட்டும் பதிவு செய்யலாம். ஜூன் 3ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு பிறகு இணையவழியில் பெறப்படும் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படமாட்டாது.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் பாட புத்தகங்களை மட்டுமே மேற்கோளாக காண்பிக்க வேண்டும். ஆட்சேபனைகள் குறித்து வல்லுநர்கள் குழு தேர்வுக்கான விடைகளை இறுதி செய்து அறிவிக்கும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

TNPSC Group 2 Login Link

TNPSC குரூப் 2 ஆன்சர் கீ 2022 டவுன்லோடு செய்வது எப்படி?

TNPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும் – http://www.tnpsc.gov.in

ஆன்சர் கீ லிங்கை கிளிக் செய்யவும்

உங்கள் விவரங்களை உள்ளிடவும்

TNPSC குரூப் 2 பிரிலிம்ஸ் ஆன்சர் கீ 2022 ஐ டவுன்லோட் செய்யவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.