தட்சிண கன்னடா : ‘‛ஹிஜாப் விஷயத்தில் அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத விரிவுரையாளர்கள், நீதிமன்றத்தில் பதிலளிக்க வேண்டும்,” என பா.ஜ., – எம்.எல்.ஏ., வேதவியாச காமத் தெரிவித்தார்.தட்சிண கன்னடா மங்களூரு பல்கலைக்கழகத்திற்கு வந்த முஸ்லிம் மாணவியர், தங்கள் ‘ஹிஜாப்’ எனும் முகம் மற்றும் உடலை மறைக்கும் ஆடையை அகற்ற மறுப்பு தெரிவித்தனர்.
இதனால், அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.இந்த விவகாரம் குறித்து, பல்கலைக்கழக அபிவிருத்தி கமிட்டி தலைவரும், பா.ஜ., – எம்.எல்.ஏ.,வுமான வேதவியாச காமத், கல்லுாரி முதல்வர் யடபதித்யாய, சிண்டிகேட் உறுப்பினர்கள் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.பின், நிருபர்களிடம் வேதவியாச காமத் கூறியதாவது:கல்லுாரியில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
வகுப்பறைகளில் ஹிஜாப் தடை செய்யப்பட்டுள்ளது. இது கண்டிப்பாக பின்பற்றப்படும்.உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பின் தேர்வுகள் இருந்ததால், விதிமுறைகள் தெரிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது சிண்டிகேட் கூட்டத்தை நடத்தி தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.விதிகளை பின்பற்றாத விரிவுரையாளர்கள் மீது ஆதாரம் இருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.முஸ்லிம் மாணவியர் எங்களை அணுகியபோது, நாங்கள் அவர்களை சமாதானப்படுத்த முயற்சித்தோம்.
ஆனால் அவர்கள் துணை ஆணையரிடம் செல்வோம் என்றனர். நானும் செல்லுங்கள் என கூறினேன்.முஸ்லிம் மாணவியருக்கு அறிவுரை வழங்குவோம். அவர்கள் வேறு ஏதாவது கல்லுாரியில் சேர விரும்பினால், ஏற்பாடு செய்வோம்.பல்கலைக்கழக கல்லுாரியை டில்லி ஜெ.என்.யு., போன்று மாற விடமாட்டேன். எஸ்.டி.பி.ஐ., அமைப்பினரும், காங்கிரசாரும், மாணவியரை துாண்டிவிட்டுள்ளனர்.மங்களூரில் பிறந்தவர்கள், நாட்டை சீரழிக்க நினைக்கமாட்டார்கள். அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத விரிவுரையாளர்கள், நீதிமன்றத்தில் பதிலளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement