ஆன்லைன் வங்கி பரிவர்த்தனை செய்பவரா நீங்க.. கண்டிப்பா இதை படியுங்க..!

பணம் அனுப்ப வேண்டும் எனில், முதலில் நாம் யோசிப்பது ஆன்லைன் வங்கி சேவையைத் தான். முந்தைய காலத்தில் பணம் அனுப்ப வேண்டுமெனில் வங்கிக்கு சென்று கால் கடுக்க நிற்க வேண்டும்.

ஆனால் இன்று அப்படியில்லை. நிமிடங்களில் இருந்த இடத்தில் இருந்தே பணி செய்து கொள்ளலாம்.

எனினும் ஆன்லைன் வங்கியில் ஃபிஷிங், அடையாள திருட்டு மற்றும் ஹேக்கிங் உள்ளிட்ட கவலைகள் எழுந்துள்ளன.

நேரடியாக பதிவு செய்யுங்கள்?

குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் ரகசிய தகவலைப் பெற திருடும் அபாயம் உள்ளது. ஆக பாதுகாப்பான ஆன்லைன் வங்கி சேவையினை பெற என்ன செய்யலாம் வாருங்கள் பார்க்கலாம்.

முதலாவதாக உங்கள் வங்கியின் இணையதளத்தினை அணுக நேரடியாக URL பதிவு செய்ய வேண்டும். உதாரணத்திற்கு எஸ்பிஐ இணைதளத்தினை கூகுளில் சென்று SBI Online என பதிவு செய்வார்கள். ஆனால் https://www.onlinesbi.com/ என்று பதிவு செய்ய வேண்டும்.

ஓடிபி-யை பாதுகாப்பாக வையுங்கள்

ஓடிபி-யை பாதுகாப்பாக வையுங்கள்

வங்கிகளும் அவற்றின் பிரதி நிதிகளும் உங்களுக்கு மின்னஞ்சல்/ எஸ் எம் எஸ் அல்லது அனுப்புவதில்லை. உங்கள் தனிப்பட்ட விவரங்கள், கடவுச்சொல் அல்லது ஒருமுறை எஸ் எம் எஸ் மூலம் கடவுச் சொல்லை பெறலாம். அப்படி ஓடிபி வந்தால், பணம் மோசடியாக எடுக்க முயற்சிக்கிறார்கள் என அர்த்தம். ஆக அழைப்புகள் மின்னஞ்சல்கள் வரும்போது பதிலளிக்காமல் இருப்பது நல்லது.

 தேவையில்லாத மெயில்களுக்கு பதிலளிக்க வேண்டாம்
 

தேவையில்லாத மெயில்களுக்கு பதிலளிக்க வேண்டாம்

சில நேரங்களில் உங்களுக்கு ஏதேனும் சலுகைகள் கிடைக்கும் என்ற மெயில்கள் வரலாம். அவ்வாறு வரும் மெயில்களுக்கு பதிலளிக்காமல் இருப்பது நல்லது.

அதேபோல இணைய வங்கியினை பயன்படுத்த எப்போதும் உங்கள் தனிப்பட்ட கணினியை பயன்படுத்துங்கள். வெயில் உள்ள கணினிகளை பயன்படுத்துவதை முற்றிலும் தவிருங்கள். அப்படியே கட்டாயம் பயன்படுத்த வேணடிய கட்டாயம் ஏற்பட்டால், முறையாக வெளியேறுங்கள். குறிப்பாக நெட் கஃபேக்களில் சென்று லாகின் செய்யாதீர்கள்.

பாஸ்வேர்டினை அடிக்கடி மாற்றுங்கள்

பாஸ்வேர்டினை அடிக்கடி மாற்றுங்கள்

அதேபோல ஆன்லைனில் பரிவர்த்தனை செய்யும்போது ஒவ்வொரு முறையும் சரியான தொகை கழிக்கப்பட்டுள்ளதா? அப்படி இல்லாவிட்டால் உடனடியாக வங்கிக் கிளையை அணுகவும்.

உங்கள் கணினிகளில் பயன்படுத்தப்படும் ஆண்டி வைரஸ் சாப்ட்வேரினை, லைசென்ஸ் உள்ளதாக பயன்படுத்துங்கள். இதுவும் உங்கள் தரவுகளை பாதுகாக்க பயனுள்ளதாக இருக்கும். அதேபோல அடிக்கடி உங்களது பாஸ்வேர்டுகளையும் மாற்றிக் கொள்ளுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

important things to safe for online banking?

Be careful of any kind of things when using internet banking. What to watch out for. Let’s see

Story first published: Sunday, May 29, 2022, 21:58 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.