'இந்தியாவில் டெஸ்லா வாகன உற்பத்தி கிடையாது' – எலான் மஸ்க் ட்விட்டுக்கு பதிலளித்த ஓலா சிஇஓ

”டெஸ்லா கார்களை முதலில் விற்பனை செய்யவும், சர்வீஸ் செய்யவும் அனுமதிக்காத வரை இந்தியாவில் எந்த இடத்திலும் கார் உற்பத்தி ஆலையை அமைக்க முடியாது” என்று எலான் மஸ்க் கூறியுள்ளார்.

ஓலா நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்கி இருக்கிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மட்டுமின்றி எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய ஓலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி ஆலையை அமைக்குமா என ட்விட்டரில் நெட்டிசன் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், டெஸ்லா கார்களை முதலில் விற்பனை செய்யவும், சர்வீஸ் செய்யவும் அனுமதிக்காத வரை இந்தியாவில் எந்த இடத்திலும் கார் உற்பத்தி ஆலையை அமைக்க முடியாது” என்று கூறினார்.
எலான் மஸ்க்கின் இந்த பதிவுக்கு ஓலா நிறுவன தலைமை செயல் அதிகாரி பவிஷ் அகர்வால், ‘Thanks, but no thanks’ என கூறியுள்ளார். இந்த ட்விட்டில் உள்ள ஆழ்ந்த நகைச்சுவையை நெட்டிசன்கள் பலரும் ரசித்து வருகின்றனர்.

image
முன்னதாக, வாகனங்களை விற்பனை செய்வதற்கான இறக்குமதி வரி எந்த நாட்டிலும் இல்லாத அளவில் இந்தியாவில் அதிகம் என்றும் 40,000 அமெரிக்க டாலருக்கு அதிகமான மதிப்புள்ள கார்களுக்கு 100 சதவீத இறக்குமதி வரியும், அதற்கு குறைவான கார்களுக்கு 60 சதவீத இறக்குமதி வரியும் இந்தியா விதிக்கிறது என்றும் தனது அதிருப்தியை எலான் மஸ்க் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாம்: தென் தமிழகத்தில் முதல்முறையாக மதுரையில் கணைய, சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.