இந்தியாவுடன் அதிகம் வர்த்தகம் செய்யும் நாடு – சீனாவை முந்தியது அமெரிக்கா!

இந்தியாவுடன் அதிகம் வர்த்தகம் செய்யும் நாடுகளின் பட்டியலில் சீனாவை முந்தி அமெரிக்கா மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.
இந்தியாவுடன் அதிகம் வர்த்தகம் செய்யும் நாடுகளின் பட்டியலில் சீனாவை முந்தி அமெரிக்கா மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளதாக வர்த்தக அமைச்சகத்தின் தரவுகளில் தெரியவந்துள்ளது. 2020-21 இல் 51.62 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த அமெரிக்காவிற்கான ஏற்றுமதி 2021-22ல் 76.11 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இறக்குமதிகள் 2020-21 இல் $29 பில்லியனாக இருந்த நிலையில் $43.31 பில்லியனாக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 2020-21 இல் 80.51 பில்லியன் டாலராக இருந்த இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தகம் 2021-22 ஆம் ஆண்டில் 119.42 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
US Becomes India's Biggest Trading Partner At $119.42 Billion, Surpasses  China - Indiaahead News
அதே வேளையில் கடந்த நிதியாண்டில் சீனாவுக்கான ஏற்றுமதி 2020-21ல் 21.18 பில்லியன் டாலரிலிருந்து 21.25 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இறக்குமதி 2020-21ல் 65.21 பில்லியன் டாலரிலிருந்து 94.16 பில்லியன் டாலராக உயர்ந்தது. முந்தைய நிதியாண்டில் 44 பில்லியன் டாலராக இருந்த வர்த்தக இடைவெளி 2021-22ல் 72.91 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக் சீனாவுடனான இந்தியாவின் இருவழி வர்த்தகம் 2020-21 இல் 86.4 பில்லியன் டாலருடன் ஒப்பிடுகையில், 2021-22 ஆம் ஆண்டில், 115.42 பில்லியன் டாலராக இருந்தது என்று தரவு காட்டுகிறது. ஆனால் சீனாவுடன் ஒப்பிடுகையில் 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகமாக அமெரிக்கா வர்த்தகம் செய்துள்ளது.
India, China Trade Surges to Over USD 31 Billion in Q1 of 2022 Despite  Bilateral ChillSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.