டாவோஸ் : கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்துக்கு, ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார அமைப்பின் மாநாடு நடந்து வருகிறது.
இந்த மாநாட்டுக்கு இடையே, நம் சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்சை சந்தித்து பேசினார்.’இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்துக்கு பில் கேட்ஸ் பாராட்டு தெரிவித்தார்’ என, சமூக வலைதளப் பதிவில் மன்சுக் மாண்டவியா குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து பில் கேட்ஸ் கூறியுள்ளதாவது:இந்திய சுகாதார அமைச்சரை சந்தித்து பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது. கொரோனா தடுப்பூசி உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினோம்.இந்தியாவின் கொரோனா தடுப்பூசி இயக்கம், அதை செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப பயன்பாடு ஆகியவை பிரமாண்டமானது. இந்தியாவின் இந்த வெற்றிகரமான இயக்கம், உலக நாடுகளுக்கு சிறந்த பாடமாகும்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement