இந்திய பணக்காரர்களின் வீட்டை பார்த்து இருக்கீங்களா..? இது வீடு இல்லை, சொர்க்கம்..!

இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் அவர்களின் சொத்து மதிப்பு போலவே அவர்களின் வீட்டையும் மிகப்பெரிய மதிப்பில் வைத்துள்ளனர்.

பாகிஸ்தான் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி.. இந்தியாவை விட 3 மடங்கு அதிகம்..!

முகேஷ் அம்பானி வீட்டை பற்றிப் பலரும் அறிந்திருந்தாலும், அவரைத் தாண்டி இந்தியாவின் பிற பெரும் பணக்காரர்களின் ஆடம்பர வீடும் மிகவும் பிரம்மாண்டமாகவும், அதிக விலை மதிப்புடையதாக உள்ளது.

முதல் இடம்

முதல் இடம்

இந்த வீட்டை பற்றி எவ்வளவு பேசப்பட்டாலும் இந்திய பணக்கார்களின் வீடு என்றால் முதல் இடத்தில் எப்போதும் இருப்பது முகேஷ் அம்பானி-யின் 20000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆன்டிலியா வீட்டு தான். உலகிலேயே அதிக மதிப்புடைய தனிநபர் வீடாக ஆன்டிலியா உள்ளது.

37000 சதுரமீட்டர் அளவில் 27 மாடி வீடாக அமைந்துள்ள ஆன்டிலியா வீட்டில் 168 கார் பார்கிங், 9 ஹைய் ஸ்பீட் லிப்ட், 50 சீட் கொண்ட தியேட்டர், மற்றும் இன்னும் ஏராளமான ஆடம்பர வசதிகளைக் கொண்டுள்ளது.

2012 முதல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி ஆன்டிலியா வீட்டில் வசித்து வருகிறார்.

கௌதம் அதானி - சாந்திவன்

கௌதம் அதானி – சாந்திவன்

இந்தியாவின் பெரும் பணக்காரர் ஆக இருக்கும் கௌதம் அதானி-க்குச் சொந்தமாக நாட்டின் பல பகுதிகளில் சொத்துக்களை வைத்திருந்தாலும், அவர் தனது குடும்பத்துடன் அகமதாபாத்தில் ‘சாந்திவன்’ என்று அழைக்கப்படும் SG சாலையில் உள்ள வீட்டில் தான் வசிக்கிறார்.

அதுமட்டுமின்றி, குர்கானில் உள்ள சர்கேஜில் ஒரு அரண்மனை பங்களாவும், லுட்யன்ஸின் டெல்லியில் ரூ. 400 கோடி மதிப்புள்ள வீடுகளிலும் மாறி மாறி வசித்து வருகிறார்.

கௌதம் சிங்கானியா
 

கௌதம் சிங்கானியா

கவுதம் சிங்கானியா உலகின் மிகப்பெரிய சூட் ஃபேப்ரிக் பிராண்டான ரேமண்ட் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார்.

ஜேகே ஹவுஸ் என்று அழைக்கப்படும் சிங்கானியாவின் வீடு, ₹600 கோடி மதிப்புள்ள இந்தியாவின் இரண்டாவது மிக உயரமான தனிநபர் வீடாக உள்ளது.

குமார் மங்கலம் பிர்லா

குமார் மங்கலம் பிர்லா

2015 ஆம் ஆண்டில், ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, மலபார் ஹில்லில் உள்ள ஜாதியா ஹவுஸ் என்ற மிகப்பெரிய வீட்டை 425 கோடி ரூபாய்க்கு வாங்கினார்.

ஜாதியா ஹவுஸ் குறைந்தபட்சம் 28,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் ஒரு சதுர அடிக்கு கிட்டத்தட்ட ரூ. 1.5 லட்சம் மதிப்புடையது.

சைரஸ் பூனவல்லா

சைரஸ் பூனவல்லா

இந்தியாவின் மிகப்பெரிய மருந்து தயாரிப்பு சாம்ராஜ்ஜியத்தின் நிறுவனரான சைரஸ் பூனவல்லா, 2015 இல் மும்பையின் கடலோர பகுதியில் அமைந்துள்ள லிங்கன் ஹவுஸ் என்ற மாளிகையை வாங்கினார்.

அமெரிக்க அரசாங்கம் மற்றும் இந்திய மகாராஜா பிரதாப்சின்ஜி ஜலா வான்கனர் ஆகியோர் இந்த வீட்டின் முன்னாள் உரிமையாளர்களாக இருந்து உள்ளது.

இந்த மாபெரும் வீட்டை சைரஸ் பூனவல்லா சுமார் 750 கோடி ரூபாய் முதலீடு செய்து வாங்கினார். இது மும்பையில் மிகவும் விலையுயர்ந்த ரியல் எஸ்டேட் ஒப்பந்தங்களில் ஒன்றாக இன்றளவும் கூறப்படுகிறகு

 ராதாகிஷன் தமனி

ராதாகிஷன் தமனி

டிமார்ட் நிறுவனத்தின் நிறுவனரான ராதாகிஷன் தமனி தனது சகோதரர் கோபி கிஷனுடன் சேர்ந்து தெற்கு மும்பையில் உள்ள மலபார் ஹில் பகுதியில் சுமார் 1,001 கோடி ரூபாய்க்கு ஒரு வீட்டை வாங்கினார்.

இந்தப் பிரம்மாண்ட வீடு சுமார் 5,750 சதுர அடி பரப்பளவில் உள்ளது, இந்த வீட்டிற்காகத் தமனி பத்தரத் தொகையாக மட்டும் சுமார் ₹30 கோடி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

கோத்ரெஜ் குடும்பம்

கோத்ரெஜ் குடும்பம்

ஹோமி ஜஹாங்கிர் பாபாவின் மும்பை இல்லம் 2014 ஆம் ஆண்டு அதன் பாதுகாவலரான தேசிய நிகழ்ச்சி கலை மையம் ஏலம் விட்டது. இந்த வீட்டை கோத்ரெஜ் குடும்பத்தைச் சேர்ந்த ஸ்மிதா க்ரிஷ்னா-கோத்ரேஜால் 372 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இடிக்கப்பட்டது.

அனில் அம்பானி

அனில் அம்பானி

மும்பையின் முக்கியப் பகுதிகளில் ஒன்றான பாந்த்ராவின் பாலி மலையில் அனில் அம்பானிக்கு சொந்தமான அடோப் வீடு 5000 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுகிறது.

இந்த வீடு 1600 சதுர மீட்டரில் அமைந்துள்ளது. இந்த வீட்டில் நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், பெரிய கார் பார்கிங் மற்றும் சில ஹெலிகாப்டர்கள் நிறுத்த கூடிய ஹெலிபேட் என அனைத்து உயர்தர வசதிகளையும் கொண்டுள்ளது.

ரத்தன் டாடா

ரத்தன் டாடா

இந்தியாவின் வர்த்தகச் சந்தையை வேகமாக வளர்ச்சி பாதைக்குக் கொண்டு வரும் முயற்சியில் முக்கியப் பங்கு வகித்தவர் ரத்தன் டாடா. இவர் தற்போது 13,350 சதுர அடியில் அமைந்துள்ள கொலாபா ரிட்டையர் ஹோம்-ல் வசித்து வருகிறார்.

அவரது ஆளுமையைப் போலவே நேர்த்தியாகவும் மென்மையாகவும் இருக்கும் இந்த வீட்டில் சன் டெக், இன்ஃபினிட்டி பூல், மீடியா ரூம், லைப்ரரி மற்றும் தனிப்பட்ட உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றைக் கொண்டு உள்ளது.

ஈஷா அம்பானி

ஈஷா அம்பானி

முகேஷ் அம்பானியின் ஓரே மகளான ஈஷா அம்பானி மற்றும் அவரது கணவர் ஆனந்த் பிராமல் ஆகியோரின் வீடு தான் இந்தக் குலிதா பெயர் கொண்ட ஆடம்பர வீடு.

வோர்லி பகுதியில் கடலை பார்வையாகக் கொண்ட இந்த வீடு 50,000 சதுர அடியில் ஐந்து மாடிகள், மூன்று அடித்தளங்கள், ஒரு பெரிய புல்வெளி, ஒரு குளம் போன்றவற்றைக் கொண்டுள்ளது. இந்தக் குலிதா வீட்டில் மதிப்பு 452 கோடி ரூபாய்.

ஈஷா அம்பானி தற்போது ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Ratan tata To Isha Ambani; Indian Billionaire’s Expensive Homes are eye catching

Ratan tata To Isha Ambani; Indian Billionaire’s Expensive Homes are eye catching இந்திய பணக்கார்களின் வீட்டை பார்த்து இருக்கீங்களா..? இது வீடு இல்லை, சொர்க்கம்..!

Story first published: Sunday, May 29, 2022, 18:11 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.