உக்ரைனில் சோலார் மின்உற்பத்தி ஆலை மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ தாக்குதல் 3 மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், ரஷ்ய படைகளின் மும்முனை தாக்குதலில் உக்ரைன் நகரங்கள் அனைத்தும் சின்னா பின்னமாகி விட்டன.
இந்நிலையில், உக்ரைனின் 2-ஆவது பெரிய நகரமாக கார்கிவ் அருகே உள்ள மெரெபாவில் சோலார் மின்உற்பத்தி ஆலை மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.