கிழக்கு உக்ரைன் பிராந்திய தலைவர்களிடம் இருந்து பகுதிகளை கைப்பற்றும் முயற்சியில் சிறப்புப் படையணியை களமிறக்கியுள்ளது ரஷ்யா.
டான்பாஸ் பகுதியில் ரஷ்யா முன்னேறி வருவதால், கொலைப் படைகளின் இலக்கில் இருந்து தப்புவதற்காக கிழக்குப் பகுதிகளில் உக்ரேனிய அதிகாரிகள் தொடர்ந்து நகர்ந்து வருதாக கூறப்படுகிறது.
ரஷ்யா முன்னெடுத்துள்ள புதிய இந்த தாக்குதலானது சோவியத் ரஷ்யாவில் 1918 முதல் 1922 வரையில் பிரபலம் என கூறப்படுகிறது.
Luhansk பிராந்திய பொலிஸ் தலைவரும் உள்ளூர் தலைவர்கள் சிலரும் தொடர்ந்து இடம் மாறியபடி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ரஷ்யர்கள் எங்கள் தலைக்கு இலக்கு வைத்துள்ளனர், உயிருடன் அல்லது பிணமாக எங்களை குறிவைத்துள்ளனர் என்றார் அந்த பொலிஸ் தலைவர்.
Luhansk பிராந்தியத்தின் 95% தற்போது ரஷ்ய கட்டுப்பாட்டில் சென்றுள்ளது, நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியும் ஒப்புக்கொண்டுள்ளார் என்றே கூறப்படுகிறது.
டான்பாஸ் உக்ரைனில் எப்போதும் நீடிக்கும், ஏனென்றால் இதுதான் நாங்கள், இது எங்கள் தனித்துவம் என்றார் ஜெலென்ஸ்கி.
மேலும், ரஷ்யா இங்கு அழிவையும் துன்பத்தையும் கொண்டு வந்தாலும், ஒவ்வொரு நகரத்தையும் ஒவ்வொரு சமூகத்தையும் நாம் மீட்டெடுப்போம் என சூளுரைத்தார் ஜெலென்ஸ்கி.
இதனிடையே, Luhansk பிராந்தியத்தில் இருந்து உக்ரைன் படைகள் எப்போது வேண்டுமானாலும் பின்வாங்கலாம் என ஆளுநர் Serhiy Haidai குறிப்பிட்டுள்ளர்.
மரியுபோல் பகுதியில் நடந்த கொடூர தக்குதல் போன்று Luhansk பிராந்தியத்தில் ரஷ்யா முன்னெடுக்கலாம் என்ற அச்சம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.