உண்மையான விளாடிமிரி புடின் இறந்திருக்கலாம்… பகீர் கிளப்பும் பிரித்தானிய உளவுத்துறை


ரஷ்ய தலைவரின் உடல்நிலை குறித்த ஊகங்களுக்கு மத்தியில் விளாடிமிர் புடின் ஏற்கனவே இறந்துவிட்டதாக MI6 வட்டாரங்கள் சந்தேகம் எழுப்பியுள்ளன.

சமீப நாட்களில் ரஷ்ய ஜனாதிபதியின் நடவடிக்கைகள் அனைத்தும் இதையே உறுதி செய்வதாகவும், உண்மையான புடின் அல்ல பொதுவெளியில் தோன்றுபவர் எனவும் பிரித்தானிய உளவு அமைப்பான MI6 சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், அதிகாரத்தில் தொடரும் நோக்கில் விளாடிமிர் புடினின் நெருக்கமான கோடீஸ்வரர்கள் அவரது மரணத்தை மூடி மறைத்து வருவதாகவும் MI6 வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த சில மாதங்களாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உடல் நலக் கோளாறினால் கடுமையாக அவதிப்பட்டு வந்துள்ளார்.
அவரது முகம் வழக்கத்துக்கு மாறாக வீங்கியிருந்தது. இதனால் 69 வயதேயான விளாடிமிர் புடினுக்கு இரத்தப் புற்றுநோயாக இருக்கலாம் என தகவல் பரவியது.

உண்மையான விளாடிமிரி புடின் இறந்திருக்கலாம்... பகீர் கிளப்பும் பிரித்தானிய உளவுத்துறை

மேலும், சமீபத்தில் அவர் செய்தி ஊடகங்களில் அல்லது பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை எனவும்,
ஏற்கனவே தயார் செய்யப்பட்ட காணொளிகள் மட்டுமே வெளியிடப்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர்.

மட்டுமின்றி, சமீபத்தில் வெற்றிவிழா கொண்டாட்டத்தில் புடின் கலந்துகொண்டிருக்க வாய்ப்பில்லை எனவும், அவருக்கு பதிலாக உருவ ஒற்றுமை கொண்ட நபர் கலந்துகொண்டிருக்கலாம் எனவும் MI6 வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உண்மையான விளாடிமிரி புடின் இறந்திருக்கலாம்... பகீர் கிளப்பும் பிரித்தானிய உளவுத்துறை

பலமுறை விளாடிமிர் புடினே தமது உடல் ஒற்றுமை கொண்ட நபர்களை பொது நிகழ்ச்சிகளில் தமக்கு பதிலாக களமிறக்கியுள்ளார் எனவும் கூறப்படுகிறது.
விளாடிமிர் புடின் இறந்துவிட்டார் என அறிவிக்கப்பட்டால், அதன் பின்னர் அவருக்கு மிக நெருக்கமான அதிகார குழுக்கள் சிக்கலை எதிர்கொள்ளும் எனவும்,

கைது நடவடிக்கைகள், ஆட்சி கவிழ்ப்பு உள்ளிட்டவை அரங்கேறலாம் எனவும், இராணுவமே களமிறங்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே, புடின் மரணமடைந்த தகவலை வெளியிடாமல் இரகசியம் காப்பதாக கூறப்படுகிறது.

உண்மையான விளாடிமிரி புடின் இறந்திருக்கலாம்... பகீர் கிளப்பும் பிரித்தானிய உளவுத்துறை

இரண்டு வாரங்களுக்கு முன்னர், புடினுக்கு நெருக்கமான கோடீஸ்வரர் ஒருவர் கூறுகையில், விளாடிமிர் புடின் புற்றுநோயால் கடுமையாக அவதிப்படுவதாகவும், உக்ரைன் மீது போர் தொடுக்கும் முன்னர் அறுவை சிகிச்சை ஒன்றை முன்னெடுத்தார் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, உக்ரைனின் ராணுவ உளவுத்துறையின் தலைவர் மேஜர் ஜெனரல் கிரிலோ புடானோவ், புடின் புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.