உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 50.17 கோடியாக உயர்வு

வாஷிங்டன்,

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 கோடியே12 லட்சத்து 22 ஆயிரத்து 652 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 50 கோடியே 17 லட்சத்து 81 ஆயிரத்து 957 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 63 லட்சத்து 10 ஆயிரத்து 242 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் ஒரே நாளில் 11ஆயிரத்து 595 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது .ஒரே நாளில் 41 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.


Related Tags :

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.