ஐ.பி.எல். கோப்பையை வெல்லப்போவது யார்? – குஜராத் – ராஜஸ்தான் அணிகள் இறுதிஆட்டத்தில் இன்று மோதல்

ஆமதாபாத்,

ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் குஜராத்-ராஜஸ்தான்அணிகள் இன்றிரவு கோதாவில் இறங்குகின்றன.15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 26-ந்தேதி தொடங்கியது.10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் குஜராத் டைட்டன்சும், ராஜஸ்தான் ராயல்சும் இறுதிசுற்றை எட்டின.எதிர்பார்க்கப்பட்ட நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிகள் கடைசி இரு இடத்துக்கு தள்ளப்பட்டன.இந்த நிலையில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்சும், ராஜஸ்தான் ராயல்சும் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடிஸ்டேடியத்தில் இன்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) மோதுகின்றன. இதையொட்டி இரு அணியினரும் நேற்று தீவிர பயிற்சிமேற்கொண்டனர்.

இந்த சீசனில் அறிமுக அணியாக பயணத்தைதொடங்கிய ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. லீக் சுற்றில்10 வெற்றிகளுடன் முதலிடத்தை பிடித்த அந்த அணி, முதலாவது தகுதி சுற்றில் ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறி வியப்பில் ஆழ்த்தியது.குஜராத்தை பொறுத்தவரை பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சரிசம பலத்துடன் திகழ்கிறது. பேட்டிங்கில் நெருக்கடியான தருணத்தில் அற்புதமாக செயல்படுகிறார்கள். ‘சேசிங்’கின்போது 7 ஆட்டங்களில் கடைசி ஓவரில்வெற்றி பெற்றதே அதற்கு சான்று. சுப்மான் கில், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா,டேவிட் மில்லர், ராகுல் திவேதியா,சஹா உள்ளிட்டோர் பேட்டிங்கிலும்,முகமது ஷமி, ரஷித்கான், யாஷ் தயாள்ஆகியோர் பந்து வீச்சிலும் கலக்குகிறார்கள். ரஷித்கான் பெரிய அளவில் விக்கெட் வீழ்த்தாவிட்டாலும் தனது மாயாஜால சுழல் ஜாலத்தால் அதிகம்ரன் போகாமல் பார்த்துக்கொள்கிறார். ஓவருக்கு சராசரியாக 6.73 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து கவனத்தை ஈர்த்துள்ளார்.போட்டி நடக்கும் ஆமதாபாத் அந்த அணியின் சொந்தஊர் என்பதால் ரசிகர்கள் ஆதரவு அவர்களுக்கு அமோகமாக இருக்கும். அதுவும் ஏறக்குறைய 1லட்சம் ரசிகர்கள் முன்னிலையில் விளையாட இருப்பது உண்மையிலேயே பரவசப்படுத்தும். ஆனாலும் நெருக்கடிக்குள்ளாகாமல் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தும்படி குஜராத் அணி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2008-ம்ஆண்டு முதலாவது ஐ.பி.எல். கோப்பையை வென்றது. அதன் பிறகு ௧௪ ஆண்டுகள் கழித்து இப்போது தான் இறுதிப்போட்டிக்கு வந்திருக்கிறது. லீக்சுற்று முடிவில் புள்ளிபட்டியலில் 2-வது இடத்தை பிடித்த ராஜஸ்தான் அணி முதலாவது தகுதி சுற்றில் குஜராத்திடம் தோல்வியை தழுவியது.

அதைத் தொடர்ந்து இன்னொருவாய்ப்பாக 2-வது தகுதி சுற்றில் விளையாடி பெங்களூருவை பந்தாடி இறுதிப்போட்டியை உறுதிசெய்தது.பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணி நிர்ணயித்த 158 ரன்கள் இலக்கை ராஜஸ்தான் 11 பந்துகள் மீதம் வைத்து எட்டிப்பிடித்தது.ஜோஸ் பட்லர் 10பவுண்டரி, 6 சிக்சருடன் 106ரன்கள் நொறுக்கினார்.

நடப்பு தொடரில் 4சதம், 4 அரைசதம் உள்பட 824ரன்கள் குவித்து ஆரஞ்சு நிற தொப்பியை தக்கவைத்துள்ளஜோஸ் பட்லர்இறுதி ஆட்டத்திலும் அதிரடி காட்டும் வேட்கையில் உள்ளார். அவர் நிலைத்து நின்று மட்டையை சுழட்டினால் தான்ராஜஸ்தானின் கை ஓங்கும். எனவே குஜராத் பவுலர்களின் பிரதான குறியாக ஜோஸ் பட்லர் தான் இருப்பார்.இதே போல் கேப்டன் சஞ்சு சாம்சன்,தேவ்தத் படிக்கல், ஜெய்ஸ்வால், ஹெட்மயர் ஆகியோரும் பேட்டிங்கில் ஓரளவுநல்ல நிலையில் உள்ளனர். ஆனால்பந்து வீச்சுதான் சீராக இல்லை. கடந்தசில ஆட்டங்களில் அஸ்வின், யுஸ்வேந்திர சாஹலின் பந்து வீச்சு எடுபடவில்லை. முந்தைய ஆட்டத்தில் ஒபெட்மெக்காய், பிரசித் கிருஷ்ணா இதே மைதானத்தில் தலா 3விக்கெட்டுகளை சாய்த்தனர். அதனால் அவர்கள் மீது இன்றைய ஆட்டத்திலும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த சீசனில் இவ்விரு அணிகளும் 2 ஆட்டங்களில் சந்தித்துள்ளன. லீக் சுற்றில் குஜராத் 37 ரன்கள் வித்தியாசத்திலும், முதலாவது தகுதி சுற்றில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் ராஜஸ்தானை புரட்டியெடுத்தது. இவ்விரு வெற்றிகளும் மனரீதியாக குஜராத்துக்கு உத்வேகம் அளிக்கும். அதே நேரத்தில் முந்தைய தோல்விகளுக்கு பதிலடி கொடுத்து ஐ.பி.எல். கோப்பையை கையில் ஏந்த ராஜஸ்தான் வீரர்கள் துடிப்புடன் காத்திருக்கிறார்கள்.

எனவே களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம் போட்டி நடக்கும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான ஆமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம் பேட்டிங்குக்கு சாதகமானது. அத்துடன்ஆடுகளத்தில் ஓரளவு புற்கள் இருப்பதால் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சுக்கும் ஒத்துழைக்கும். எனவே’டாசில்’ ஜெயிக்கும் அணி 2-வது பேட்டிங்குக்கே முன்னுரிமை அளிக்கும்.இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்தஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

குஜராத்: விருத்திமான் சஹா, சுப்மான் கில், மேத்யூ வேட், ஹர்திக்பாண்ட்யா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் திவேதியா, ரஷித்கான்,சாய்கிஷோர், அல்ஜாரி ஜோசப்அல்லது பெர்குசன், முகமது ஷமி,யாஷ் தயாள்.

ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன்), தேவ்தத் படிக்கல், ஹெட்மயர், ரியான்பராக்,அஸ்வின், டிரென்ட் பவுல்ட்,யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா,ஒபெட் மெக்காய்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.