ஆயுத விநியோகத்தைப் பொறுத்தவரை, ஒவ்வொரு நாளும் நாங்கள் எங்கள் எதிரியை விட அதிகமாக பெற்று வருவதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
உக்ரைனுக்குள் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி ரஷ்ய வீரர்கள் ஊடுருவினார்கள்.
இரு நாடுகளுக்கும் இடையிலான போர் தாக்குதல் 3 மாதங்களை கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது.
போர் தொடர்பில் தற்போது உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், உக்ரைன் சுதந்திரத்தை பாதுகாக்க தேவையான உதவிகளை வழங்க நட்பு நாடுகள் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், ஆயுத விநியோகத்தைப் பொறுத்தவரை, ஒவ்வொரு நாளும் நாங்கள் எங்கள் எதிரியை விட அதிகமாக பெற்று வருவகிறோம் என கூறியுள்ளார்.
அதன்படி ரஷ்யாவுடனான போரில் நட்பு நாடுகள் தொடர்ந்து பெரியளவில் உதவுவதை அவர் இங்கு குறிப்பிட்டுள்ளார்.