கனடாவில் வசிக்கும் அழகான கோடீஸ்வர மாப்பிள்ளை என சொக்கி போன 300 இந்திய பெண்கள்! கோடிகளில் மோசடி.. எச்சரிக்கை செய்தி


கனடா வாழ் இந்தியராக தன்னை காட்டி கொண்டு 300 பெண்களை ஏமாற்றிய நைஜீரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவை சேர்ந்தவர் கரூபா கலுாம்ஜெ (38). இவர், தெற்கு டில்லி கிஷண் கார்க் என்ற இடத்தில் தங்கியிருந்தார்.

திருமண வலைதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில், கனடாவில் குடியேறிய இந்தியர் என தன்னை அறிமுகம் செய்து, திருமணம் செய்து கொள்வதாக பல பெண்களிடம் வாக்குறுதி அளித்துள்ளார்.

அதன்படி தனக்கு நல்ல மணப்பெண் தேடுவதாகக் கூறி பல பெண்களிடம் போலியாக பேசி அவர்களிடம் பணம் பறித்துள்ளார். இதுவரை இவர் 300க்கும் மேற்பட்ட பெண்களை குறிவைத்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்துள்ளதாகவும், இதற்காக ஸ்மார்ட்டாக தெரியும் இந்திய ஆண்களின் பல புகைப்படங்களை ப்ரோபைல் பிக்சராக பயன்படுத்தியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெண்கள் பலரும் கனடாவில் வசிக்கும் அழகான மற்றும் வசதிபடைத்த நபர் என நம்பி கனவு கண்டு ஏமாந்துள்ளனர். இவர் மீது முதன்முதலாக உத்தரப் பிரதேசத்தின் மீரட் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

கனடாவில் வசிக்கும் அழகான கோடீஸ்வர மாப்பிள்ளை என சொக்கி போன 300 இந்திய பெண்கள்! கோடிகளில் மோசடி.. எச்சரிக்கை செய்தி

காபி போடுவதற்கு பால் வாங்க கடைக்கு சென்று கோடீஸ்வரனாக திரும்பிய இளைஞன்! நடந்த நம்பமுடியாத ஆச்சரியம்

இவரிடம் திருமணம் செய்து கொள்வதாகப் பேசி பழகி எமோஷனல் பிளாக் மெயில் செய்து ரூ.60 லட்சம் வரை சுருட்டியுள்ளார் இந்த நைஜிரிய குடிமகன். அந்த பெண்ணின் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கிய சைபர் கிரைம் காவல்துறை, கரூபா தான் குற்றவாளி எனக் கண்டுபிடித்து அவர் தங்கி இருந்த தெற்கு டெல்லியில் கிசான் கர் பகுதியில் அவரை கைது செய்தது.

இவரின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இவரிடம் இந்தியாவில் தற்போது வசிப்பதற்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

கரூபா, மனித முடி வியாபாரத்துக்காக ‘விசா’ பெற்று கடந்த 2019ல் டெல்லி வந்தார். பின், மருத்துவ சிகிச்சை எனக்கூறி மார்ச் மாதம் மீண்டும் வந்துள்ளார்.

அதன்பின், டில்லியிலேயே இடம் மாறி தங்கி மோசடி செய்துள்ளார்.
அவரிடம் இருந்து, ஏழு பாஸ்போர்ட்கள், மொபைல் போன்கள், ஏ.டி.எம்., கார்டுகள், ‘இன்டர்போல்’ மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை ஆகியவை பெயரில் போலி கடிதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

கரூபாவிடம் தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மேலும் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனடாவில் வசிக்கும் அழகான கோடீஸ்வர மாப்பிள்ளை என சொக்கி போன 300 இந்திய பெண்கள்! கோடிகளில் மோசடி.. எச்சரிக்கை செய்தி



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.