கமலின் விக்ரம் படத்தின் டிக்கெட் புக்கிங் இன்று முதல் தொடங்கியது!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்பட பலர் நடித்துள்ள விக்ரம் படம் ஜூன்3 ஆம் தேதி வெளியாகிறது, அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் சூர்யா ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கான பிரமோஷன் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. ரயில் வண்டிகளில் விக்ரம் படத்தின் பிரமோஷன் தொடங்கப்பட்ட நிலையில் இப்போது எங்கு பார்த்தாலும் அப்படத்தின் பேனர்களாக தெரிகிறது. விமான நிலையங்களில் உள்ள பெயர் பலகைகளில் விக்ரம் படத்தின் விளம்பரம் ஒட்டப்பட்டுள்ளது.
நகர்ப்புறங்களில் உள்ள பல மால்களிலும் விக்ரம் படத்தின் டிரைலர் ஒளிபரப்பாகி வருகிறது. இப்படி திரும்பும் திசையெல்லாம் விக்ரம் படத்தின் புரமோஷன் களைகட்டியிருக்கிறது. அதுமட்டுமன்றி சோசியல் மீடியாவிலும் விக்ரம் படம் குறித்து பெரிய அளவில் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக பஞ்சதந்திரம் படத்தில் கமல்ஹாசன், ஜெயராம், ரமேஷ் அரவிந்த் ,யூகிசேது போன்றவர்கள் கான்பரன்ஸ் ஹாலில் பேசும் காட்சியை அப்படியே விக்ரம் பட புரமோஷனுக்காக புதிதாக மாற்றி அமைத்து உள்ளார்கள். இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் மோகன்லாலுடன் கமல்ஹாசன் கலந்து கொண்டு விக்ரம் படம் குறித்து பேசியிருக்கிறார். விக்ரம் படம் இந்தியாவில் உள்ள பல்வேறு மொழிகளில் வெளியாகும் நிலையில் அங்குள்ள பிரபலங்களை வைத்து இதுபோன்று பிரமோஷனை முடுக்கி விட்டுள்ளார் கமல்ஹாசன். அதோடு இப்படத்துக்காக மலேசியாவிலும் பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் விக்ரம் படத்தின் முன்பதிவு துவங்கி உள்ளது.