காங்கிரஸ் பிரமுகர் கே.ஜி.எப்., பாபு வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு| Dinamalar

பெங்களூரு : காங்கிரஸ் பிரமுகரான கே.ஜி.எப்., பாபுவின் பெங்களூரு வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.கோலார் தங்கவயலை பூர்வீகமாக கொண்டவர் யூசுப் ஷெரிப் எனப்படும் கே.ஜி.எப்., பாபு, 50. கடந்த மேலவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.அந்த தேர்தலின் போது வேட்பு மனுவில் 1,741 கோடி ரூபாய் சொத்துகள் உள்ளதென குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் வருமன வரி செலுத்தியதற்கும், அவர் அறிவித்திருந்த சொத்து மதிப்புக்கும் வித்தியாசம் இருந்தது.இந்நிலையில் வருமான வரித்துறையினர் நேற்று காலை 7:30 மணி அளவில் பெங்களூரு வசந்த நகரில் உள்ள உள்ள அவர் வீடு, அலுவலகம், நண்பர்கள் வீடு என ஏழு இடங்களில் சோதனை நடத்தினர். நான்கு கார்களில் வந்த அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதில் அவருக்கும், குடும்பத்தினருக்கும் 12 வங்கிகளில் 23 கணக்குகள் இருந்தது. அதில்,70 கோடி ரூபாய் பணம் இருந்தது தெரியவந்துள்ளது.மைசூரில் உள்ள உறவினரும், 17வது வார்டு மாநகராட்சி உறுப்பினருமான ரேஷ்மி பானு வீட்டிலும் சோதனை நடந்தது. அவரது கணவர் ரகுமான்கான் வருவாய் குறித்தும் விசாரணை நடக்கிறது.இவர் அடுத்து நடக்க உள்ள சட்ட சபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட டிக்கெட் கேட்க உள்ளார்.இந்த நேரத்தில் அவரது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி இருப்பது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.