சமீபத்திய காலமாக இந்தியாவின் வணிக நடவடிக்கைகள் சீனாவினை விட அமெரிக்காவில் அதிகரித்து வருகிறது. இதற்கு சரியான உதாரணம் தான் இந்த பதிவு.
கடந்த 2021 – 22ம் ஆண்டில் சீனாவினை தாண்டி, அமெரிக்கா இந்தியாவின் சிறந்த வர்த்தக நாடாக மாறியுள்ளது.
வர்த்தக அமைச்சகத்தின் அறிக்கையின் படி, 2021 – 22ம் ஆண்டில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இருதரப்பு வணிகமானது 80.51 பில்லியன் டாலரில் இருந்து, 119.42 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் முக்கியப் பேச்சுவார்த்தை.. ஹைட்ரோபவர் திட்டம்..!
டிராகன் தேசத்துடனான வணிகம்
இதே டிராகன் தேசத்துடனான வணிகம் 86.4 பில்லியன் டாலர்களில் இருந்து, 115.42 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. 2020 – 21ல் 21.18 பில்லியன் டாலராக இருந்த ஏற்றுமதியானது, கடந்த நிதியாண்டில் 21.25 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இறக்குமதி விகிதமானது 65.21 பில்லியன் டாலரில் இருந்து, 94.16 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
வர்த்தக பற்றாக்குறை
இதன் மூலம் சீனாவிற்கும் இந்தியாவுக்கும் இடையில் 44 பில்லியன் டாலராக இருந்த வர்த்தக பற்றாக்குறையானது, கடந்த ஆண்டில் 72.91 பில்லியன் டாலராக விரிவடைந்துள்ளது.
இதே அமெரிக்காவிற்காக ஏற்றுமதி விகிதமானது 2020 0 21ல் 51.62 பில்லியன் டாலராக இருந்த நிலையில், கடந்த நிதியாண்டில் 76.11 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதே இறக்குமதியானது 29 பில்லியன் டாலரில் இருந்து 43.31 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
வளர்ச்சி அதிகரிக்கும்
ஏற்றுமதியாளர்கள் இன்னும் அமெரிக்காவுடனான வணிக உறவு மேம்படலாம். இது வரும் ஆண்டிலும் இன்னும் வணிக பரிவர்த்தனை அதிகரிக்கலாம். இதன் மூலம் இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி விகிதமும் மேம்பட்லாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவை மட்டும் சார்ந்திருக்கவில்லை
இது குறித்து இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு துணைத் தலைவர் காலித் கான் கூறுகையில், இந்தியா நம்பகமான வர்த்தகப் பங்காளியாக உருவெடுத்து வருகின்றது. உலக நிறுவனங்கள் தங்கள் பொருட்களுக்கு சீனாவை மட்டுமே சார்ந்திருப்பதை குறைத்து, இந்தியா போன்ற பிற நாடுகளில் வணிகத்தினை மேம்படுத்தலாம் என்றும் கூறியுள்ளார்.
அமெரிக்காவுடன் உபரி
வரவிருக்கும் ஆண்டுகளிலும் அமெரிக்கா இந்தியா இடையிலான வணிகம் மேம்படும். இதன் மூலம் இருதரப்பு வணிகமும் மேம்படும். இதனால் இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும் மேம்படும். கடந்த நிதியாண்டிலேயே இந்தியா அமெரிக்காவுடனான வணிகத்தின் மத்தியில் 32.8 பில்லியன் டாலர் உபரியை வைத்துள்ளது. 2013 – 14 முதல் 2017 – 18 வரையிலும்ம் 2020 – 21ம் காலகட்டத்திலும் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக சீனா இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்த இடங்கள்
2021 – 22ல் 72.9 பில்லியன் டாலர் வணிக வளர்ச்சியுடன் யுஏஇ, இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக பங்காளியாக இருந்தது. அதனை தொடர்ந்து சவுதி அரேபியா 42.85 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகமும், ஈராக் 34.33 பில்லியன் டாலர் மதிப்பிலும், சிங்கப்பூர் 30 பில்லியன் டாலர் மதிப்பிலும் வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றன.
US India’s biggest trading partner in FY22: What is the status of China?
Beyond China in 2021-22, the United States has become India’s best trading nation. Bilateral trade between the US and India increased to $ 119.42 billion by 2021-22.