குஜராத் | நாட்டிலேயே முதல்முறை; ட்ரோன் மூலம் பார்சல் டெலிவரி செய்த இந்திய அஞ்சல் துறை

அகமதாபாத்: நாட்டிலேயே முதல் முறையாக ட்ரோன் மூலம் பார்சலை டெலிவரி செய்து அசத்தியுள்ளது இந்திய அஞ்சல் துறை. இது சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தின் புஜ் (Bhuj) தாலுகாவில் உள்ள ஹபே (Habay) கிராமத்தில் இருந்து கட்ச் மாவட்டத்தில் உள்ள நேர் கிராமத்திற்கு ட்ரோன் மூலம் பார்சல்களை அனுப்பி உள்ளது இந்திய அஞ்சல் துறை. மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் பேரில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சுமார் 46 கிலோ மீட்டர் தூரத்தை வெறும் 25 நிமிடங்களில் கடந்த ட்ரோன், பார்சலை டெலிவரி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி வெற்றி பெற்றுள்ள நிலையில் வரும் நாட்களில் ட்ரோன் மூலம் டெலிவரி செய்யும் பணியை இந்திய அஞ்சல் துறை முன்னெடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மருந்து மாத்திரைகளை ட்ரோன் மூலம் இந்திய அஞ்சல் துறை டெலிவரி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார் மத்திய இணை அமைச்சர் தேவுசிங் சவுகான் அதனை ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார். மேலும் ட்ரோன் மூலம் தபால் விநியோக பணிக்கு ஆகும் செலவு மற்றும் இந்த பணியில் ஊழியர்களுக்கு இடையே உள்ள ஈடுபாட்டையும் அறிந்து கொள்ள முடிந்ததாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரோன் மஹோத்சவ் 2022-இன் ஒரு பகுதியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் தேவுசிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.