தங்கத்தின் விலையினை நிர்ணயிக்கும் 5 முக்கிய காரணிகள்.. என்ன செய்யலாம்?

தங்கம் விலையானது கடந்த 2 வாரங்களாகவே தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், இது இனி வரும் வாரங்களில் எப்படியிருக்கும்? கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களில் என்ன?

டாலரின் மதிப்பு எவ்வளவு? பத்திர சந்தையானது எப்படியுள்ளது? இரண்டுமே தங்கத்திற்கு ஆதரவாக உள்ளது.

இதற்கிடையில் வரவிருக்கும் அமெரிக்க ஃபெடரல் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அரசிடம் எவ்வளவு தங்கம் இருக்கு தெரியுமா.. கேட்டா ஆடிப்போயிருவீங்க..!

டாலர் மதிப்பு & பத்திர மதிப்பு

டாலர் மதிப்பு & பத்திர மதிப்பு

ஆக வரும் வாரத்தில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம். அமெரிக்க டாலர் மதிப்பு மீண்டும் 20 வருட உச்சத்தில் இருந்து 101 டாலராக சரிவினைக் கண்டுள்ளது. இது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். இதனை ஊக்கப்படுத்தும் விதமாக பத்திர சந்தையானது சரிவினைக் கண்டு வருகிறது. இது தங்கத்திற்கு ஆதவாக அமைந்துள்ளது.

பங்கு சந்தை

பங்கு சந்தை

சர்வதேச பங்கு சந்தைகள் தொடர்ந்து மீண்டும் கண்டு வரும் நிலையில், இது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். மேலும் டாலரின் மதிப்பானது மேற்கொண்டு சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கம் விலையானது 1900 டாலர்களை தாண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் உற்பத்தி தரவு
 

சீனாவின் உற்பத்தி தரவு

சீனாவின் லாக்டவுன் சீனாவின் உற்பத்தியினை பாதித்து இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் உற்பத்தி குறித்தான தரவானது வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சந்தையில் மேற்கொண்டு தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

ஐரோப்பிய மத்திய வங்கி

ஐரோப்பிய மத்திய வங்கி

அமெரிக்க மத்திய வங்கியினை தொடர்ந்து, ஐரோப்பிய மத்திய வங்கியும் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பங்கு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அன்னிய முதலீடுகள் வெளியேற வழிவகுக்கலாம். இது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.

ரூபாய் Vs   டாலர்

ரூபாய் Vs டாலர்

அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில வாரங்களாக, வரலாற்று குறைந்தபட்ச மதிப்பினை எட்டியது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் மதிப்பில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

 விவசாயம் அல்லாத தரவு

விவசாயம் அல்லாத தரவு

அமெரிக்காவின் விவசாயம் அல்லாத வேலை வாய்ப்பு குறித்தான தரவானது, சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது வரும் வாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது பொருளாதார வளர்ச்சி குறித்தான தரவாக இருக்கலாம். ஏற்கனவே பொருளாதார வளர்ச்சி குறித்தான தரவாக இருக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

gold price on 29th may 2022: 5 Factors that may decide gold’s movement this week

5 key factors that determine the price of gold .. What can be done?

Story first published: Sunday, May 29, 2022, 11:52 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.