தங்கம் உற்பத்தி செய்யும் பீகார் அரசு.. இந்தியாவிலேயே அதிக தங்கம் வைத்துள்ள மாநிலம் இதுதான்..!

பீகாரில் உள்ள ஜமுய் மாவட்டத்தில் 27.6 டன் சிறப்புத் தங்க தாதுக்கள் உட்படச் சுமார் 222.88 மில்லியன் டன் தங்கம் தாது இருப்பு இருப்பதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பீகார் மாநிலத்தின் நிதிஷ் குமார் அரசு, இந்தியாவின் மிகப்பெரிய தங்க இருப்பு என்று அழைக்கப்படும் இடத்தை ஆய்வு செய்ய அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது.

தங்க நகைக்கு ஜூன் 1 முதல் ஹால்மார்க் கட்டாயம்.. நகை வாங்கும்போது கவனிக்க வேண்டியது என்ன?

 பீகார் மாநிலம்

பீகார் மாநிலம்

பீகார் மாநில சுரங்கம் மற்றும் புவியியல் துறை ஜமுய்யில் உள்ள தங்க இருப்புகளை ஆய்வு செய்வதற்காகத் தற்போது ஜிஎஸ்ஐ மற்றும் தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் (என்எம்டிசி) உள்ளிட்ட முக்கிய அமைப்புகள் உடன் ஆலோசனை நடத்தி வருகிறது எனக் கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் சுரங்க ஆணையர் ஹர்ஜோத் கவுர் பம்ஹ்ரா தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசு

ஒன்றிய அரசு

மேலும் பீகார் அரசு ஒன்றிய அரசு அமைப்புகளுடன் G3 மற்றும் G2 ஆய்வுக்காக அடுத்த ஒரு மாதத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய உள்ளதாகப் பீகார் கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் சுரங்க ஆணையர் ஹர்ஜோத் கவுர் பம்ஹ்ரா தெரிவித்துள்ளார்.

மத்திய சுரங்கத் துறை
 

மத்திய சுரங்கத் துறை

கடந்த ஆண்டு, மத்திய சுரங்கத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மக்களவையில், இந்தியாவின் தங்க தாது கையிருப்பில் பீகாரில் தான் அதிகப்படியான பங்கை கொண்டு உள்ளது என்று கூறியிருந்தார்.

4 சதவீதம்

4 சதவீதம்

மேலும் மக்களவையில் அளிக்கப்பட்ட எழுத்துப்பூர்வ பதிவில், பீகாரில் 222.885 மில்லியன் டன் தங்க உலோகத்தின் தாதுக்கள் இருப்பதாகவும், இது நாட்டின் மொத்த தங்க கையிருப்பில் 44 சதவீதமாகும் என்றும் கூறியிருந்தார்.

பீகார் மாஸ்

பீகார் மாஸ்

இதன் மூலம் பீகார் அதிகப்படியான தங்க இருப்பைக் கொண்டு இருப்பது மட்டும் அல்லாமல் தற்போது இதை உற்பத்தி செய்து அரசு பணமாக்க முடிவு செய்துள்ளது. இந்தியாவில் தங்க உற்பத்தி அதிகரிக்கப்பட்டால் தங்க இறக்குமதி குறைந்து வர்த்தகப் பற்றாக்குறை அளவு குறையும். இதனால் தங்கம் விலை குறையாது, ஆனால் ரூபாய் மதிப்பு உயர்வு..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

India’s largest gold reserve Jamui district of Bihar set to exploration

India’s largest gold reserve Jamui district of Bihar set to exploration தங்கம் உற்பத்தியில் இறங்கும் பீகார் அரசு.. இந்தியாவிலேயே அதிகத் தங்கம் வைத்துள்ள மாநிலம் இதுதான்..!

Story first published: Sunday, May 29, 2022, 20:43 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.