துப்பாக்கி கலாச்சர வன்முறையை தடுக்க முடியாமல் திணரும் அமெரிக்கா

அமெரிக்காவில் தலை தூக்கும் துப்பாக்கி கலாச்சாரம் பிரச்சினை குறித்த விவாதம் வலுப்பெற்று வருகிறது. நாட்டில் ஆயுதங்களை வைத்திருப்பதற்கு விதிவிலக்கு அளித்ததே கட்டுப்பாடற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு காரணமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சமீபத்தில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு 21 பேர் உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதங்களில், இதே போன்ற துப்பாக்கி சூடு சம்பவம்  மற்ற நாடுகளை விட அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தினால் செய்யப்படும் கொலை விகிதம் ஏன் அதிகமாக உள்ளது என்ற விவாதத்தை மீண்டும் சூடுபடுத்தியுள்ளது. அமெரிக்காவில் குழந்தைகளின் மரணத்திற்கு துப்பாக்கி வன்முறையே முக்கிய காரணம் என்று அமெரிக்காவைச் சேர்ந்த ‘குழந்தைகள் பாதுகாப்பு நிதியம்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கூறியுள்ளது.

அமெரிக்காவில் ஆயுதங்களை வைத்திருப்பது சாமானியர்களின் அரசியலமைப்பு உரிமைகளில் ஒன்றாகும். இதனால் அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும், கொலை மற்றும் துப்பாக்கிச் சூடு போன்ற முக்கிய சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்குகளில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் இறக்கின்றனர். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) புள்ளிவிவரங்கள் இதை கூறுகின்றன.

நாட்டில் தினமும் 9 குழந்தைகள் கொல்லப்படுகின்றனர்

அமெரிக்காவில் தினமும் சராசரியாக 9 குழந்தைகள் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் இறக்கின்றனர் என NGO தரவுகள் கூறுகின்றனர். அதாவது, நாட்டில் சராசரியாக இரண்டு மணி நேரம் 36 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை துப்பாக்கி சூடு சம்பாவத்தில் இறக்கிறது. சமீபத்திய ஆண்டுகளில் சில சர்வதேச ஆராய்ச்சிகள், துபக்கி வைத்திருப்பதற்கு கொடுக்கப்படும் தடையில்லாத உரிமைகள் பெரிய அளவில், துப்பாக்கி வன்முறை சம்பவங்களுடன் நெருங்கிய தொடர்புடையவை என்பதை நிரூபித்துள்ளன.

நீண்ட காலமாக அமெரிக்காவில் ஆயுதங்களை வைத்திருப்பதற்கும் வாங்குவதற்கும் கடுமையான சட்டங்கள் தேவை என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. நாட்டின் அரசியலில் ஆயுதம் தயாரிப்பவர்கள் நடத்து ஆதிக்கம் மற்றும் வலுவான தலையீடு காரணமாக, இதுவரை உறுதியான சட்டம் எதுவும் உருவாக்கப்படவில்லை.

மேலும் படிக்க | அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கி கலாச்சாரம்; அதிர வைக்கும் தகவல்கள்

துப்பாக்கி முனையில்  தினம் தினம் அமெரிக்க குழந்தைகள்  கொல்லப்படும் நிலையில், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவே பெற்றோர்கள் பயப்படும் நிலைக்கு தள்ளியுள்ளது. ‘நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின்’ வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வு அறிக்கையில், அமெரிக்காவில் துப்பாக்கியால் கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை, ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா, ஸ்வீடன், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் போன்ற மற்ற வளர்ந்த நாடுகளை விட 36.5 மடங்கு அதிகம் என கூறப்பட்டுள்ளது

ஃபின்லாந்திலும் நார்வேயிலும் அமெரிக்காவைப் போல ஆயுதங்கள் அதிகம் புழங்கினாலும், வன்முறை சம்பவம் குறைவாக உள்ளது. அனைத்து 50 அமெரிக்க மாநிலங்களின் மேம்பாட்டிற்கான ஆய்வு  குழு ஒன்று மேற்கொண்ட ஆய்வில், கடுமையான துப்பாக்கிச் சட்டங்களைக் கொண்ட மாநிலங்களுக்கும், அதிக துப்பாக்கி வன்முறை விகிதங்களைக் கொண்ட மாநிலங்களுக்கும் இடையே வலுவான தொடர்பைக் கண்டறிந்தது. சர்வதேச ஆராய்ச்சியாளர்களும் தேசிய துப்பாக்கி சட்டங்கள், துப்பாக்கி உரிமையின் விகிதங்கள் மற்றும் துப்பாக்கி வன்முறை வழக்குகள் ஆகியவற்றின் ஒப்பீட்டு ஆய்வை நடத்தினர்.

சுவாரஸ்யமாக, நார்வே மற்றும் பின்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில், அமெரிக்காவைப் போலவே துப்பாக்கி வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. துப்பாக்கி வன்முறையைப் பொறுத்தவரை உலகின் பாதுகாப்பான சமூகங்களில் ஒன்றாக இந்த நாடுகள் உள்ளன. அதிக அளவிலான சமூக ஒற்றுமை, குறைந்த குற்ற விகிதங்கள் மற்றும் காவல்துறை மற்றும் சமூக நிறுவனங்களில் மீதான் பெரிய அளவு நம்பிக்கை ஆகியவை துப்பாக்கிச் சூடு சம்பவங்களைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மேலும் படிக்க | அமெரிக்க மக்களை அச்சுறுத்தும் பொருளாதார மந்தநிலை; காரணம் என்ன

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.