திருவள்ளூரில் மாநகரப் பேருந்தில் பயணியும், நடத்துனரும் தாக்கிக் கொள்ளும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 6ஆம் தேதி செங்குன்றம் பகுதியில் இருந்து பொன்னேரிக்கு சென்ற சென்னை மாநகரப் பேருந்தில் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த ஹரி என்ற இளைஞர் சென்றுள்ளார்.
அப்போது படியில் பயணித்த ஹரியை, பேருந்தின் நடத்துனர் தேவன் என்பவர் உள்ளே வரும்படி கூறியுள்ளார். அப்போது இளைஞர் பேருந்தின் உள்ளே வராததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் நடத்துனரை அந்த இளைஞர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நடத்துனர் அந்த இளைஞரை தகாத வார்த்தைகளில் திட்டிக்கொண்டே தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதுகுறித்து கவரைபேட்டை காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் புகார் அளித்துள்ளனர். பின்னர் இருவரும் சமரசமாகி சென்றதாக கூறப்படும் நிலையில், அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.