21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் , அரசியல் மறுசீரமைப்பு தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போது நாட்டு மக்களுக்கு மக்களுக்கு விசேட உரையாற்றியுள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்படுமெனவும் அதற்கான காலம் மற்றும் வழிமுறைகளை கட்சித் தலைவர்கள் முடிவுசெய்யலாம் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
நிதி மற்றும் மேற்பார்வைகளுக்காக 15 தெரிவுக்குழுக்களை நியமிக்கவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.