பெங்களூரு : கன்னட எழுத்தாளரும், பத்திரிகையாளருமான கவுரி லங்கேஸ் வழக்கு மீதான விசாரணை, பெங்களூரு முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜூலை 4 முதல் விசாரிக்கப்படவுள்ளது.கன்னட எழுத்தாளரும், பத்திரிகையாளருமான கவுரி லங்கேஸ், 2017 செப்டம்பர் 5ல், பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் அவரது வீட்டு முன் மர்ம நபரால் சுட்டுகொல்லப்பட்டார்.
கொலை தொடர்பாக, அவரது சகோதரி கவிதா லங்கேஸ் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் நடத்திய விசாரணையில், 17 பேர், குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டனர்.இந்த வழக்கு விசாரணை, பெங்களூரு முதன்மை செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி சி.எம்.ஜோஷி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, புகார்தாரர் கவிதாவிடம் விசாரிக்கப்பட்டது.ஆனால், குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராகாததால் விசாரணை நடத்த கூடாது என்று 17 பேர் தரப்பிலான வழக்கறிஞர் கோரினார்.
நீதிபதி கூறியதாவது:விசாரணையின் போது, குற்றஞ்சாட்டப்பட்ட சிலர் இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதற்கு வழக்கறிஞருக்கு உரிமை உள்ளது. ஆனால் அவர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்று வலியுறுத்த முடியாது.எனவே பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் உள்ளவர்கள் மற்றும் மும்பை ஆர்தர் சாலை சிறையில் உள்ளவர்களை, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.இந்த வழக்கின் விசாரணை, ஜூலை 4 முதல் 8 வரை தினமும் நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement