நீலகிரி அருகே பொதுமக்கள் இரண்டு நபர்களின் உயிரை பறித்த காட்டு யானையை, ட்ரோன்கள் மூலமும், இரண்டு கும்கி யானைகள் மூலமாகவும் வனத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் மக்கள் வசிக்கும் இடங்களில் உலா வந்து கொண்டிருந்த காட்டு யானை ஒன்று, கடந்த 26ஆம் தேதி கோவிந்தன் கடை என்ற இடத்தில் ஆனந்தன் என்பவரை படுகொலை செய்தது.’
அதனைத் தொடர்ந்து மறுநாள் 27ஆம் தேதி மும்தாஜ் என்ற பெண்ணையும் தாக்கிக் கொலை செய்தது. இதனையடுத்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் வனத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில், வனத்துறை அதிகாரிகள் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ள அந்த யானை இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர்.
இதற்காக 2 கும்கி யானைகள் மூலமாகவும் தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளனர். மேலும், கூடுதலாக ட்ரோன்கள் மூலமாகவும் அந்த காட்டு யானையை வனத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.