புதுடெல்லி: மன் கி பாத் நிகழ்ச்சியில் தஞ்சை மகளிர் சுயஉதவி குழுவினரை பிரதமர் மோடி பாராட்டினர். பிரதமர் மோடி இன்று ‘மன் கி பாத்’ என்ற வானொலி நிகழ்ச்சியில் பேசுகையில், ‘ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் மூலம் புதிய இந்தியா உருவாகி வருகிறது. நாடு முழுவதும் ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கேதார்நாத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால் சில யாத்ரீகர்கள் பரப்பும் அசுத்தத்தால் கவலையடைகிறேன். புனிதப் பயணம் மேற்கொள்ளும் போது, அங்கு குப்பைகளை கொட்டுவதை தவிர்க்க வேண்டும். புனித யாத்திரையின் முக்கியத்துவத்தைப் போலவே, சேவையின் முக்கியத்துவமும் அவசியம். ஊரகப் பகுதிகளில் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்குவதில் தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் வேம்பு முக்கிய பங்கு வகித்து வருகிறார். தஞ்சாவூரைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழுவினர், புவிசார் குறியீடு பெற்ற தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் மட்டுமின்றி இதர பொருட்களையும் சிறப்பாக விற்று வருகின்றனர். அவர்களை நாமும் பாராட்டுவசர்வதேச யோகா தினம் அடுத்த மாதம் 21ம் தேதி கொண்டாடப்படுவதால், அதில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும். உடல் நலத்தை பாதுகாப்பதில் யோகா வலிமையானதாக உள்ளது. நாட்டின் விடுதலைப் பெருவிழாவை கொண்டாடி வரும் நாம், நாட்டின் வளர்ச்சிக்காக பணியாற்ற வேண்டும்’ என்றார்.