மராட்டியத்தில் முதல் முறையாக புதிய வகை ஒமைக்ரான் தொற்றால் 7 பேர் பாதிப்பு

மும்பை,

தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கடந்த மாதம் ஒமைக்ரான் புதிய வகை மாறுபாடுகள் கொண்ட தொற்றால் பலர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் புதிய வகை ஒமைக்ரான் தொற்றால் மராட்டியத்தில் முதல் முறையாக 7 பேர் பாதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

கடந்த 4-ந் தேதி முதல் 18-ந் தேதி இடையே மாதிரிகளை பகுப்பாய்வு செய்ததில் ஒமைக்ரான் பி.ஏ.4 வகை மாறுபாட்டால் 4 பேரும், பி.ஏ.5 வகை மாறுபாட்டால் 3 பேரும் பாதிக்கப்பட்டனர் என மாநில சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

புதிய வகை மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களில் 2 பேர் தென்னாப்பிரிக்கா, பெல்ஜியம் சென்று திரும்பியவர்கள். 3 பேர் கேரளா, கர்நாடகா பயணித்துள்ளனர். மற்றவர்கள் வேறு எங்கும் செல்லாதவர்கள்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.