டெல்லி: மாநிலங்களவை தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஒன்றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல் உள்ளிட்ட 16 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மகாராஷ்டிராவில் இருந்து மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மாநிலங்களவை உறுப்பினராகிறார்.