மிளகாய் பஜ்ஜி கணக்காய் விற்பனையாகு சிஎன்ஜி கார்கள்.. என்ன காரணம் தெரியுமா..?

இந்திய ஆட்டோமொபைல் துறை கடந்த 5 வருடத்தில் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது.

இந்த மாற்றத்தில் வெற்றி காணுபவர்கள் அடுத்து 20 வருடத்திற்கு மிகப்பெரிய அளவிலான வர்த்தகத்தைப் பெற முடியும் என்பதால் அனைத்து நிறுவனனங்களும் கடுமையான முயற்சிகள் உடன் நீண்ட காலத் திட்டத்தைத் தீட்டி வருகிறது.

இந்தச் சூழ்நிலையில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் சிஎன்ஜி கார்களின் விற்பனை எண்ணிக்கை பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆட்டோமொபைல் பங்கினை வாங்கிபோடுங்க.. நிபுணர்களின் சூப்பர் பரிந்துரை..!

இந்திய ஆட்டோமொபைல்

இந்திய ஆட்டோமொபைல்

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இருந்து வெளிநாட்டு நிறுவனங்கள் அடுத்தடுத்து வெளியேறி வந்த காலத்தைத் தொடர்ந்து புதிதாக வந்த வெளிநாட்டு நிறுவனங்களிடம் வர்த்தகத்தை இழக்க கூடாது என்பதற்காக இந்திய நிறுவனங்கள் போட்டிப்போடும் நிலை உருவாகியுள்ளது.

மாற்று எரிபொருள் கார்கள்

மாற்று எரிபொருள் கார்கள்

இதேவேளையில் மாற்று எரிபொருள் கார்கள் தயாரிப்பும், விற்பனையும் வேகமாக விரிவாக்கம் அடைந்து வரும் நிலையில் வாடிக்கையாளர்களைத் தக்க வைக்கவும், புதிய வாடிக்கையாளர்களைப் பெற வேண்டும் என்பது ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.

சிஎன்ஜி கார்களின் விற்பனை
 

சிஎன்ஜி கார்களின் விற்பனை

ஒருபக்கம் மாற்று எரிபொருள் அதாவது எலக்ட்ரிக் கார்கள், ஹைட்ரஜென் வாயு & ஹைட்ரஜென் செல் கார்கள், சிஎன்ஜி கார்கள் தயாரிப்பதில் அதிகளவிலான முதலீட்டை செய்து வரும் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்குச் சிஎன்ஜி கார்களின் விற்பனை எண்ணிக்கையும், அதற்கான காரணமும் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

முக்கியப் பிரச்சனைகள்

முக்கியப் பிரச்சனைகள்

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் எலக்ட்ரிக் கார்களின் அதிகப்படியான விலையும், தீ பிடிக்கும் ஆபத்தும், பெட்ரோல் டீசல் விலையில் உயர்வு என்டரி பிரிவு வாடிக்கையாளர்களை உண்மையில் பயமுறுத்தியுள்ளது. இதனால் இந்தியாவின் அதிகப்படியான என்டரி பிரிவு வாடிக்கையாளர்களைத் தற்போது சிஎன்ஜி கார்களை வாங்க துவங்கியுள்ளனர்.

 27000 சிஎன்ஜி கார்கள் விற்பனை

27000 சிஎன்ஜி கார்கள் விற்பனை

ஏப்ரல் மாதம் இந்தியாவில் மொத்தம் 27000 சிஎன்ஜி கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது, இந்த அளவீடு கடந்த வருடத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாகும். இதே விட முக்கியாகப் பெட்ரோல், டீசல் கார்களை ஒப்பிடும் போது சிஎன்ஜி கார்களை இயக்குவதில் ஏற்படும் செலவுகள் 40-50 சதவீதம் குறைகிறது.

வெறும் 2 ரூபாய் மட்டுமே

வெறும் 2 ரூபாய் மட்டுமே

மேலும் சிஎன்ஜி வாகனங்கள் ஒரு கிலோமீட்டர் செல்ல வெறும் 2 ரூபாய் மட்டுமே செலவாகிறதா என இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசூகி-யின் உயர் நிர்வாகத் தலைவர் ஷஷாங்க் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். இதேபோல் இந்தியாவில் சிஎன்ஜி வாகனங்கள் விற்பனையில் மாருதி சுசூகி முன்னோடியாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

CNG cars sales in India creating big change in entry level customers; EV may face trouble

CNG cars sales in India creating big change in entry level customers; EV may face trouble மிளகாய் பஜ்ஜி கணக்காய் விற்பனையாகு சிஎன்ஜி கார்கள்.. என்ன காரணம் தெரியுமா..?

Story first published: Sunday, May 29, 2022, 10:54 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.