சென்னை:
தென்மேற்கு பருவ மழை ஜூன் முதல் வாரத்தில் வழக்கமாக தொடங்கும். இந்த பருவ மழை காலத்தில் தென் மாநிலங்களில் அதிக மழை பொழிவு கிடைக்கும்.
தமிழகத்திலும் கேரளாவை ஒட்டிய மாவட்டங்களில் மழை செப்டம்பர் மாதம் வரை பரவலாக மழை பெய்யும்.
தென்மேற்கு பருவ மழை தொடங்குவது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் இன்னும் அறிவிக்கவில்லை.
ஆனால் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வேகமாக வீசுவதால் இன்று அல்லது நாளை பருவ மழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல், தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய குமரிக் கடல்-தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் நாளை (30-ந்தேதி) வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.