பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நேற்று திருவள்ளூர் அருகே பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜிகே மணி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 2000 பேர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிகள் முக்கிய தீர்மானமாக பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்படுவதாக நிறைவேற்றப்பட்டது. மேலும் தமிழக நலன் சார்ந்த 8 தீர்மானங்கள் இந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், சென்னை, பசுமை வழிச்சாலை இல்லத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உடன் அன்புமணி ராமதாஸ் சந்தித்தார்.
பாமக புதிய தலைவராக தேர்வாகியுள்ள நிலையில் ஈபிஎஸ்-ஐ சந்தித்து வாழ்த்து பெற்றார் அன்புமணி ராமதாஸ்.
இதேபோல், சென்னை, ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அன்புமணி ராமதாஸ் சந்தித்தார்.
பாமக புதிய தலைவராக தேர்வாகியுள்ள நிலையில் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார் அன்புமணி ராமதாஸ்.