ஆப்டில் இல்யூஷன் படங்கள் சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்படும் காலம் இது. ஆப்டில் இல்யூஷன் படங்கள் ஒரு பொழுதுபோக்கு புதிரி விளையாட்டுகளாக மட்டுமல்லாமல் ஆளுமையைக் குறிப்பிடுபவையாக உள்ளன.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருவதாக மட்டுமல்லாமல், படத்தைப் பார்ப்பவரின் ஆளுமையையும் குணலனையும் குறிப்பிடுகின்றன. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் உற்று கவனிக்கும்போது வேறு மாதிரியாவும் தெரியக்கூடியவை. ஒருவரின் முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து அவருடைய ஆளுமையையும் குணநலனையும் கூறலாம். அதனால், இணையத்தில் பார்வையாளர்கள் ஆப்டிகல் இல்யூஷன் படத்தை நோக்கி பெரிய அளவில் செல்கின்றனர்.
1000 வார்த்தைகளில் எழுதப்பட்ட ஒரு கட்டுரையின் சாரத்தை ஒரு படம் சொல்லிவிடும் என்கிறார்கள். ஒரு படம் ஒரு கதையை சொல்லிவிடும் என்கிறார்கள். அதே போலதான், ஒரு புகைப்படம், ஒரு ஓவியம் எல்லாம் அதனதன் வழியில் பார்வையாளர்களோடு எண்ணற்ற வார்த்தைகளைப் பேசுகின்றன.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம், நீங்கள் கற்பனை செய்து பார்க்காத அளவில், உங்களோடு பேசுகிறது. இந்த படம், பார்வையாளர் முதலில் என்ன பார்க்கிறாரோ அதன் அடிப்படையில் அவர்களின் வெவ்வேறு கண்ணோட்டங்களைப் பற்றி பேசுகிறது.
பிரைட் சைட் யூடியூப் சேனலில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆப்டிகல் இல்யூஷன் வகையைச் சேர்ந்த ஒரு ஓவியம், சமூக ஊடக பயனர்களைப் பற்றி பேச வைத்துள்ளது. அந்த ஓவியத்தில் நீங்கள் பார்க்கும் முதல் விஷயம் உங்கள் ஆளுமையின் ஒரு குறிப்பிட்ட ரகசியத்தை வெளிப்படுத்தும் என்று இந்த வீடியோ கூறுகிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், முதல் பார்வையில் உங்களுக்கு தெரிந்தது பெண் முகமா அல்லது பூக்களா என்று கூறுங்கள். உங்கள் கண்ணோட்டத்தையும் ஆளுமையையும் தெரிந்துகொள்ளுங்கள்.
பலரும் முதல் பார்வையில், ஒரு பெண்ணின் முகத்தைப் பார்த்தாலும், மற்றவர்கள் முதல் பார்வையில் பூக்களைக் பார்த்ததாகக் கூறுகிறார்கள். பிரைட் சைட் அவர்கள் முதலில் பார்த்ததின் அடிப்படையில் அவர்களின் ஆளுமைப் பண்புகளை வெளிப்படுத்தியுள்ளது.
ஒரு பெண்ணின் முகத்தை முதலில் பார்த்தால் என்ன பொருள்?
பெண்ணின் முகத்தை முதலில் பார்த்தவர்கள் மனது சொல்வதைக் கேட்கிறார்கள். அவர்கள் எப்போதும் தங்கள் உள்ளுணர்வின் குரலைக் கேட்டு முடிவெடுக்கிறார்கள். உங்கள் மனசாட்சி உங்களை ஒருபோதும் வீழ்த்துவதில்லை. நீங்களும் மற்றவர்களுக்கு உதவி செய்து அக்கறை காட்டுபவர். உங்களைச் சுற்றியுள்ள உலகில் என்ன நடக்கிறது என்று அதன் மீதும் கவனத்தைச் செலுத்துகிறீர்கள். அதாவது, ஒட்டுமொத்தமாக நீங்கள் விழிப்புடனும் உள்ளுணர்வுடனும் இருக்கிறீர்கள். உங்கள் அவதானிப்புகளின்படி, நீங்கள் தகவலறிந்த முடிவுகளை எடுப்பதால் இது ஒரு நல்ல அறிகுறியாகும்.
பூக்களைப் பார்த்தால் என்ன பொருள்?
முதல் பார்வையில், பூங்களைப் நீங்கள் அமைதியைத் தேடுகிறீர்கள் என்று அர்த்தம். புதிய சூழலில் தனியாக நேரத்தை செலவிடுவது, அமைதி அடைய உதவும். நீங்கள் எப்போதும் மன அமைதியைத் தேடுகிறீர்கள். மேலும், சிறப்பாகச் செயல்பட நன்றாக ஓய்வெடுக்க வேண்டும்.
இப்போது நீங்கள் முதலில் பார்த்தது என்ன சொல்லுங்கள்? பெண்ணின் முகமா? இல்லை பூக்களா? உங்கள் ஆளுமையை சரியாக சொல்லிவிட்டதா இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“