மூணாறு : கேரளா மூணாறு அருகே பெரியவாரை எஸ்டேட் சோலைமலை டிவிஷனில் இரண்டு மாதங்கள் இடைவெளிக்கு பின் புலியிடம் சிக்கி பசு பலியானது.அப்பகுதியில் புலிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அவற்றிடம் சிக்கி பசுக்கள் அடிக்கடி பலியாகி வருகின்றன. தோட்டத் தொழிலாளி சுப்புராஜூக்கு சொந்தமான கறவை பசு நேற்று முன்தினம் மேய்ச்சலுக்குச் சென்றது.
தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு அருகே மேய்ந்து கொண்டிருந்த பசுவை, பகலில் புலி தாக்கிக் கொன்றது.கடைசியாக 2 மாதங்களுக்கு முன் சுப்புராஜின் மற்றொரு பசு புலியிடம் சிக்கி இறந்த நிலையில் இதுவரை அவருக்குச் சொந்தமான மூன்று பசுக்களை புலி கொன்றுள்ளது. இதுதவிர அப்பகுதியில் ஆறு மாதங்களில் எட்டு பசுக்கள் புலியிடம் சிக்கி இறந்ததால் தொழிலாளர்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது.
மூணாறு : கேரளா மூணாறு அருகே பெரியவாரை எஸ்டேட் சோலைமலை டிவிஷனில் இரண்டு மாதங்கள் இடைவெளிக்கு பின் புலியிடம் சிக்கி பசு பலியானது.அப்பகுதியில் புலிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.