மேற்கத்திய நாடுகளை அச்சுறுத்த…ரஷ்யா நடத்திய ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை: வீடியோ காட்சி!


மேற்கத்திய நாடுகளை அச்சுறுத்தும் விதமாக ரஷ்யா அதிபயங்கர மற்றும் தனது அணுஆயுதத்தை தாங்கி செல்லக் கூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிக்கரமாக இன்று சோதனை செய்துள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர மோதல்கள் அதிகரிக்க தொடங்கியது.

உக்ரைனில் மீதான போர் நடவடிக்கையை எதிர்த்து மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது சொத்துகள் முடக்கம், பொருளாதார தடைகள் என விதிக்க, அதற்கு பதிலடியாக ரஷ்யாவும் பல்வேறு வர்த்தக விதிகள் மற்றும் நட்புறவு ஒப்பந்தங்களை மேற்கத்திய நாடுகளுடன் முறித்துக் கொண்டது.

இவ்வாறு மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்த நிலையில், ரஷ்யா தனது அதிபயங்கர மற்றும் அணுஆயுதங்களை தாங்கி செல்லும் Zircon ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிக்கரமாக இன்று சோதனை செய்துள்ளது.

பேரண்ட்ஸ் கடல் பகுதியில் இருந்து அட்மிரல் கோர்ஷ்கோவ் போர்க்கப்பல் உதவியுடன் ஏவப்பட்ட Zircon ஹைப்பர்சோனிக் ஏவுகணை சுமார் 6,670mph என்ற வேகத்தில் பறந்து சென்று 625 மைல்களுக்கு அப்பால் உள்ள வெள்ளை கடல் பகுதியில் உள்ள இலக்கை தாக்கி அழித்துள்ளது.

மேற்கத்திய நாடுகளை அச்சுறுத்த...ரஷ்யா நடத்திய ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை: வீடியோ காட்சி!REUTERS

கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைன் பெண் போர் கைதிகள் முன்பு…ஆண் ராணுவ வீரர்களை அடித்து சித்திரவதை செய்யும் ரஷ்யா!

இதுத் தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், Zircon ஹைப்பர்சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக 1000கிமீ தொலைவில் உள்ள கடல் இலக்கை தாக்கி அழித்து இருப்பதாக தெரிவித்துள்ளது.      



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.