ரபோனா பாஸ் மூலம் கேரளாவில் பிரபலமான கால்பந்து வீரர்… வீடியோ…

கேரளாவில் கடந்த இரு வாரங்களுக்கு முன் நடைபெற்ற உள்ளூர் கால்பந்து போட்டியில் சஜில் என்ற கால்பந்து வீரர் செய்த சாகச வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சஜில் – படங்கள் நன்றி மாத்ருபூமி

திருச்சூர் குன்னம்குளம் அருகே உள்ள செம்மனூரைச் சேர்ந்த சஜில் அங்கு நடைபெற்ற செவன்ஸ் கால்பந்து போட்டியின் அரையிறுதி போட்டியில் எதிரணி வீரர்களை குழப்பும் வகையில் தனது கால்களை மாற்றி அடித்த ரபோனா பாஸை அவரது அணியைச் சேர்ந்த மற்றொரு வீரர் கோல் ஆக்கினார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது முதல் சஜில் கேரளா முழுவதும் பிரபலமாகி உள்ளார்.

அதேபோல், கடந்த வாரம் இத்தாலியில் நடைபெற்ற ஒரு போட்டியில் கால்பந்து வீரர் மரியோ பலோடெல்லி இதே போன்ற ரபோனா கிக் மூலம் கோல் அடித்ததும் வைரலானது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.