ராதிகாவிடம் போதையில் உளறிய கோபி.. அடுத்து என்ன ? எதிர்பார்ப்பை எகிற வைத்த பாக்கியலட்சுமி புரோமோ

விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி சீரியலில், 40களின் இறுதியில் இருக்கும் கோபி தனது மனைவி பாக்கியலட்சுக்கு தெரியாமல் தனது கல்லூரி கால காதலி ராதிகாவை திருமணம் செய்துகொள்ள திட்டம் போட்டிருந்த நிலையில், கோபி போதையில் ராதிகாவிடம் உண்மையை உளறியுள்ளார். இதனால், இந்த வார புரோமோ அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

விஜய் டிவியில் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருக்கிறது பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரிய விறுவிறுப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

குடும்பமே உலகம் என்று இருக்கும் ஓரளவு மட்டுமே படித்த பாக்கியலட்சுமி. 40களின் இறுதியில் இருக்கும் அவளுடைய கணவன் கோபி. தன்னுடைய காதல், குடும்பம் இரண்டிற்கும் இடையில் சிக்கித் தவிக்கும் கோபி நெகட்டிவான கேரக்டராக இருந்தாலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கோபி தனது மனைவி பாக்கியலட்சுக்கு தெரியாமல் தனது கல்லூரி கால காதலி ராதிகாவை திருமணம் செய்துகொள்ள திட்டம் போட்டிருந்த நிலையில், பாக்கியலட்சுமி – பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்களின் மெகா சங்கமத்தில், கோபி வீட்டுக்கு உறவினர்களாக வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி, ராதிகாவிடம் கோபியை நம்பாதீர்கள் என்று கூறிவிட்டு செல்கிறார். ராதிகா, கோபியிடம் உங்கள் குடும்பத்தைப் பார்க்க வேண்டும், உங்கள் வீட்டுக்கு என்னை அழைத்துச் செல்லுங்கள் என்று வற்புறுத்துகிறாள். ஆனால், கோபி, தனது இந்த காதல் விவகாரம் எல்லோருக்கும் தெரிந்துவிடும் என்று பயப்படுகிறான். கோபி, ராதிகாவை தனது வீட்டுக்கு அழைத்துச் செல்வானா அல்லது ஏமாற்றி சமாளிப்பானா என்று பார்வையாளர்கள் மத்தியில் கேள்விகளும் எதிர்பார்ப்புகளும் எழுந்தன.

இந்த நிலையில், பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வார புரோமோ வெளியாகியுள்ளது. அதில், கோபி போதையில் ராதிகாவிடம் உண்மையை உளறுகிறான். மேலும், செல்போனில் உள்ள, தனது குடும்ப புகைப்படத்தைக் காட்டி இவள்தான் எனது மனைவி பாக்யா, என்று கூறுகிறான். ராதிகா, கோபி, பாக்யா இருக்கும் புகைப்படத்தைப் பார்த்து இது டீச்சர் என்று கூறி அதிர்ச்சி அடைகிறாள். இதனால், பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ன முடிவெடுப்பால் அடுத்து என்ன நடக்கும் என்று இந்த வார புரோமோ ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.