இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு முதலீடுகளின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. ஓரு சிலர் வரி சேமிப்புக்காக முதலீடு செய்ய நினைப்பர். சிலர் செய்யும் சேமிப்பில் வரி சேமிப்பும் கிடைத்தால் நன்றாக இருக்குமே என எண்ணலாம். மொத்தத்தில் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தினை முதலீடு செய்யும்போது, அதற்கு நிரந்தரமான வருமானமும் கிடைக்க வேண்டும். வரிசலுகையும் கிடைக்க வேண்டும். அப்படி ஏதேனும் திட்டங்கள் இருக்கா? என்பதே இன்றைய காலகட்டத்தில் பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. பொதுவாக தனி நபர்கள் செய்யும் முதலீடுகளுக்கு 80சி பிரிவின் கீழ் 1.50,000 லட்சம் ரூபாய் வரையில் வரிச்சலுகை கிடைக்கும். இன்று நாம் பார்க்கவிருக்கும் சில அஞ்சலக திட்டங்களில் வரிச்சலுகையுடன், நிரந்தர வருமானமும் கிடைக்கும். அது பற்றி பார்க்கலாம் வாருங்கள்.
கனரா வங்கி பிக்சட் டெபாசிட் வட்டி விகிதம் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?
சுகன்யா சம்ரிதி யோஜனா
பெண் குழந்தைகளுக்கான பிரத்தியேக திட்டமான சுகன்யா சம்ரிதி யோஜனா, பெற்றோர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது. இது மைனர் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது. ஒரு குழந்தையின் பிறப்பு முதல் 10 வயது வரை எப்போது வேண்டுமானாலும் தொடங்கிக் கொள்ளலாம். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 21 ஆண்டுகளாகும். அப்படி இல்லை எனில் 18 வயதுக்கு மேலாக பெண் குழந்தை திருமணம் நடக்கும் பட்சத்தில் தானாக முடித்துக் கொள்ளலாம், இந்த கணக்கினை தொடங்க பெண் குழந்தையின் வயது ஆதாரம் கட்டாயமாகும்.
SSY – வரிச்சலுகை
இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்ச வைப்பு தொகையாக 250 ரூபாய் தேவைப்படுகிறது. இதே ஒரு வருடத்தில் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்து கொள்ளலாம். இந்த சுகன்யா சம்ரிதி திட்டத்தின் கீழ் செய்யப்படும் டெபாசிட் தொகைக்கு வருமான வரி சட்டத்தின் கீழ் 80சி-ன் படி அதிகபட்சமான 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தற்போது 7.6% வட்டி கிடைக்கிறது. ஆக சேமிப்புடன் கூடுதலாக வரிச்சலுகையும் உண்டு. இதில் குழந்தை 18 வயதை அடைந்த பிறகு அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு முந்தைய நிதியாண்டில் உள்ள நிலுவையில் 50% எடுத்துக் கொள்ளலாம்.
பொது வருங்கால வைப்பு நிதி
அஞ்சலக திட்டங்களில் மிக பிரபலமான திட்டம் பிபிஎஃப் எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி. இந்த திட்டத்தில் தற்போது 7.1% வட்டி விகிதம் அளிக்கப்படுகின்றது. இது கூட்டு வட்டி அளிக்கும் ஒரு திட்டமாகும். இந்த திட்டத்தில் 80சி பிரிவின் கீழ் 1,50,000 லட்சம் வரையில் வரிச்சலுகை கிடைக்கும். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 500 ரூபாயில் இருந்து, அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரையில் டெபாசிட் செய்து கொள்ளலாம்.
பிபிஎஃப் – கவனிக்க வேண்டியவை
பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகளாகும். முதிர்வு காலத்திற்கு பிறகும் 5 ஆண்டு தொகுப்புகளாக தொடர்ந்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் முன் கூட்டியேவும் சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக முடித்துக் கொள்ளலாம். எனினும் 5 வருடங்களுக்கு பிறகே முடித்துக் கொள்ள முடியும். இந்த திட்டத்தில் அக்கவுண்ட் ஹோல்டர் இறந்து விட்டாலும் நாமினி தொடர்ந்து கொள்ளலாம்.
மூத்த குடிமக்கள் திட்டம்
எஸ் சி எஸ் எஸ் (SCSS) எனப்படும் மூத்த குடிமக்கள் திட்டத்தில் தற்போது வட்டி விகிதம் 7.4% ஆகும். வங்கி டெபாசிட் திட்டங்களுக்கு மாற்றாக பார்க்கப்படும் இந்த திட்டம், மூத்த குடி மக்களுக்கு ஏற்ற திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த திட்டத்தினை தொடங்கிக் கொள்லலாம். இது தனியாகவோ அல்லது துணையுடன் இணைந்து ஜாய்ண்ட் அக்கவுண்டாகவோ தொடங்கிக் கொள்ளலாம். இதில் குறைந்தபட்சம் 1000 ரூபாயில் இருந்து டெபாசிட் செய்து கொள்ளலாம். அதிகபட்சம் 15 லட்சம் ரூபாய் வரையில் டெபாசிட் செய்து கொள்ளலாம்.
SCSS – வரிச்சலுகை?
ஒரு நிதியாண்டில் இந்த SCSS திட்டத்தில் வட்டி விகிதம் 50,000 ரூபாயினை தாண்டினால் வட்டிக்கு வரி விதிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் செலுத்தப்படும் வட்டியில் இருந்து டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். இந்த கணக்கு 5 ஆண்டுகளுக்கு பிறகு முதிர்ச்சி அடையலாம். முதிர்வுக்கு பிறகும் 3 ஆண்டுகள் நீட்டித்துக் கொள்ளலாம். கணக்கு வைத்திருப்பவர் இடையில் மரணித்தால், இறந்த தேதியில் இருந்து, அஞ்சலத்தின் சேமிப்பு கணக்கிற்காக வட்டி கிடைக்கும். இதனை இடையில் சில காரணங்களுக்காக முடித்துக் கொள்ளலாம். ஆனால் அபாரதம் உண்டு.
5 வருட வங்கி பிக்சட் டெபாசிட்
வங்கிகளின் பிக்சட் டெபாசிட் திட்டமானது மிகவும் பிரபலமான திட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இது பாதுகாப்பான திட்டமாகவும், ரிஸ்க் அல்லாத ஒரு திட்டமாகவும் பார்க்கப்படுகின்றது. இது தற்போதைய காலகட்டங்களில் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதன் காரணமாக இது சிறந்த சேமிப்பு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. இதிலும் 80சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய்க்கு வரிச்சலுகை கிடைக்கலாம்.
FD – வரிச்சலுகை
இந்த வைப்பு நிதிக்களுக்கான வட்டி விகிதம் 40,000 ரூபாயினை தாண்டினால் டிடிஎஸ் 10% பிடித்தம் (மூத்த குடிமக்களுக்கு 50,000 ரூபாய்) செய்யப்படலாம். வங்கி அல்லாத சிறு நிதி நிறுவனங்கள் சுமார் 7% வட்டி கொடுக்கின்றன. இதிலும் 80சி பிரிவின் கீழும் வரிச்சலுகையை பெற முடியும். இதில் வங்கிகளை வட்டி விகிதம் அதிகமாகும்.
4 schemes that provide permanent income with tax savings
Here are some plans to get a permanent income and tax benefit schemes.