கோல்கட்டா: இந்தியா -வங்கதேசம் இடையிலான ரயில் 2 ஆண்டுகளுக்கு பின் தனது பயணத்தை துவக்கியது. முதல்நாளில் 100 க்குட்பட்ட பயணிகளே வந்திருந்தனர் . போக, போக பயணிகள் கூட்டம் மொய்க்கத்துவங்கும் என கிழக்கு பிராந்திய ரயில்வே மேலாளர் ஒருவர் தெரிவித்தார்.
கோவிட் காரணமாக வெளி நாட்டு விமான, ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது போக்குவரத்து சீராக துவங்கி இருக்கிறது. இந்நிலையில் வங்கதேசம் இந்தியா செல்லும் பந்தன் எக்ஸ்பிரஸ் இன்று (மே.29) புறப்பட்டு சென்றது. இன்னும் வரும் ஜூன்1 முதல் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் . கோல்கட்டா- டாக்கா, டாக்கா- கோல்கட்டா, செல்லும் ரயிலில் இரு நாட்டு பயணிகளும் மகிழ்ச்சியாக புறப்பட்டு சென்றனர்.
வங்கதேசத்தில் இருந்து வரும் மக்கள் இந்தியாவில் சிகிச்சை மற்றும் சுற்றுலா தொடர்பாக அதிகம் பேர் வருவது வழக்கமாக கொண்டுள்ளனர். கோவிட் காரணமாக இரு நாட்டு மக்கள் கடும் அளவில் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்றைய ரயில் பயணம் மகிழ்வை தருவதாக பயணிகள் தெரிவித்தனர்.
கோல்கட்டா: இந்தியா -வங்கதேசம் இடையிலான ரயில் 2 ஆண்டுகளுக்கு பின் தனது பயணத்தை துவக்கியது. முதல்நாளில் 100 க்குட்பட்ட பயணிகளே வந்திருந்தனர் . போக, போக பயணிகள் கூட்டம் மொய்க்கத்துவங்கும் என
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.