நான்கு இந்தியர்கள் உட்பட 22 பயணிகளை ஏற்றிச் சென்ற நேபாள விமானம் விழுந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
A Tara Air’s 9 NAET ரக விமானம் 4 இந்தியர்கள், மூன்று ஜப்பானியர்கள் உள்ளிட்ட 22 பயணிகளுடன் நேபாளத்தின் போக்கரா நகரில் இருந்து ஜோம்சோமுக்கு இன்று காலை கிளம்பியது.
இந்நிலையில் விமான நிலைய அதிகாரிகளுடனான தொடர்பை விமானம் இழந்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்தது. விமானத்தில் இருந்த மற்ற அனைவர்களும் நேபாளத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
தற்போது நேபாளத்தின் மஸ்டங் பகுதியில் உள்ள கோவாங் என்ற இடத்தில் விமானம் விழுந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் பயணம் செய்தவர்களின் நிலை என்ன என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
இது தொடர்பில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் நேபாள ராணுவத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதன்படி விமானமானது மணபதி ஹிமாலின் நிலச்சரிவின் கீழ் லாம்சே ஆற்றின் முகப்பில் விழுந்து நொறுங்கியதாக அவர்கள் கூறியிருக்கின்றனர்.
அப்போது பயங்கரமான சத்தம் கேட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல் வெகுவிரைவில் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.