கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகளுடன் தொடர்புபட்ட சந்தேக நபர்கள் குறித்த விசாரணைக்காக மற்றுமொரு அடையாள அணிவகுப்பு எதிர்வரும் 31ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ் பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கிற்கு சட்ட மா அதிபரின் நேரடி கண்காணிப்பு இடம்பெறுகிறது. வன்முறை சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்களுக்கு விரைவாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களின் எண்ணிக்கை 2 ,027 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினமும் 61 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சம்பவங்கள் தொடர்பில் 855 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார்