சென்ற நிதியாண்டில் (2020 – 2021) தமிழக அரசு 22,396 கோடி ரூபாய் மதிப்பிலான அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்த்துள்ளது.
இது மாநிலத்தில் கொரோனா பிரச்சனை என பல சவால்களுக்கும் மத்தியில், தமிழகம் பெரியளவிலான முதலீடுகளை ஈர்த்துள்ளது.
பாகிஸ்தான் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி.. இந்தியாவை விட 3 மடங்கு அதிகம்..!
இதுவே கடந்த 2020 – 21ம் நிதியாண்டில் 17,208 கோடி ரூபாய் மதிப்பிலான அன்னிய நேரடி முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன.
எவ்வளவு முதலீடு?
இதே டாலர் விகிதத்தில் பார்க்கும்போது 2021 – 2022ம் நிதியாண்டில் 3 பில்லியன் டாலர் முதலீட்டினை ஈர்த்துள்ளது. இது கடந்த 202 – 2021ல் 2.3 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்துள்ளது என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தினை மேம்படுத்துவதற்காக துறையின் தரவின் படி தெரிய வந்துள்ளது.
கர்நாடகா முதலிடம்
முந்தைய ஆண்டினை காட்டிலும் தமிழகத்தில் 30% மேலாக அன்னிய நேரடி முதலீடுகள் அதிகரித்து இருந்தாலும், இது கர்நாடகா, மகராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுடன் ஒப்பிடும்போது குறைவு தான். மொத்தத்தில் இந்தியாவில் அதிக அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்த்த மாநிலங்களில் கர்நாடகா முதலிடத்தில் உள்ளது.
தமிழகம் எத்தனையாவது இடம்?
கர்நாடகா மாநிலம் 22 பில்லியன் டாலர் முதலீட்டுடன் முதலிடத்திலும், மகராஷ்டிரா 15.4 பில்லியன் டாலருடன் 2வது இடத்திலும், டெல்லி 8.2 பில்லியன் டாலருடன் மூன்றாவது இடத்திலும், அதனை தொடர்ந்து 3 பில்லியன் டாலர் முதலீடுகளுடன் தமிழகமும் உள்ளது. இதே குஜராத்தில் 2.7 பில்லியன் டாலர் முதலீட்டுடனும் உள்ளது.
மொத்தத்தில் FDI விகிதம்
அக்டோபர் 2019 முதல் மார்ச் 2022 வரையிலான மொத்த அன்னிய நேரடி முதலீட்டில் மகராஷ்டிரா 28% பங்குகளுடன் முதலிடத்தில் உள்ளது. கர்நாடகா 24% பங்குகளுடன் 2வது இடத்திலும், குஜராத் 19% பங்குகளுடனும், டெல்லி 12% பங்குகளுடனும், தமிழகம் 4% பங்குகளுடனும் உள்ளது. தமிழகம் தற்போது வளர்ச்சி பாதையில் திரும்பிக் கொண்டிருந்தாலும், இன்னும் வளர்ச்சி காண வேண்டியது அதிகம் உள்ளது.
தமிழகத்தின் மொத்த நிலவரம்?
2022 – 2023ம் ஆண்டில் தமிழ் நாடு தொழில்துறை கொள்கை குறியீட்டில் படி, 2021 – 2022ம் நிதியாண்டில் மாநில அரசு 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் 68,375 கோடி ரூபாய்க்கு மேல் மொத்த முதலீடுகளை ஈர்த்துள்ளது. இதன் மூலம் 2.05 லட்சத்திற்கு மேலான வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என அறிவித்துள்ளது.
ஸ்டாலின் காலத்தில்
இவற்றில் 6100 கோடி ரூபாய் மதிப்பிலான ஆறு ஒப்பந்தங்கள் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் சமீபத்தில் கையெழுத்தானது. மேற்கண்ட 130 ஒப்பந்தங்களில் 77 நிறுவனங்கள் தொடங்கியுள்ளன. இதில் 6 உற்பத்தியினை தொடங்கியுள்ளன.
எந்தெந்த துறைகளில் முதலீடு?
மேற்கண்ட இந்த முதலீடுகள் எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோ உதிரி பாகங்கள், தொழில் துறை பூங்காக்கள், ஃப்ரீ டிரேட் வார்ஹவுஸ் ஜோன்ஸ், ஐடி மற்றும் ஐடி சார்ந்த நிறுவனங்கள், பொது உற்பத்தி,உணவு பதப்படுத்துதல், காலணி, மருந்து மற்றும் ஜவுளி, மரச்சாமான்கள் உற்பத்தி, மின்சார வாகனங்களுக்கான உள்கட்டமைப்பு வசதி என பல துறைகளில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளது.
எதிர்பார்ப்பு
தமிழகத்தில் வளர்ச்சியினை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான திட்டமிடல், முதலீடுகள் ஊக்குவிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதன் காரணமாக வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகளவில் முதலீடுகள் ஈர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
FDI Flow into tamilnadu increases 30% above in last financial year
During the last financial year (2020 – 2021) the Government of Tamil Nadu attracted foreign direct investment worth Rs. 22,396 crore.