நல்ல வளர்ச்சி பெற்றுவரும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஒன்றான ஜிலிங்கோ நிறுவனத்தின் சிஇஓ மற்றும் இணை இயக்குனர் அங்கிதி போஸ், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விலகிய நிலையில் தற்போது இந்த நிறுவனத்தில் தகவல் தொடர்பு மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி நௌஷாபா சலாவுதீன் என்பவரும் ராஜினாமா செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிங்கப்பூரை சேர்ந்த வர்த்தக நிறுவனமான ஜிலிங்கோ கடந்த 2015ஆம் ஆண்டு அங்கிதி போஸ் மற்றும் துருவ் கபூர் ஆகியோரால் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் இந்தியாவில் மட்டுமின்றி இந்தோனேசியா, ஹாங்காங், தாய்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் அங்கிதி போஸ் மீது சில குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதை அடுத்து கடந்த ஏப்ரல் மாதம் சஸ்பென்ட் செய்யப்பட்டு இருந்தார். அதன் பிறகு மே மாதம் அவர் அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறினார். இவரது வெளியேற்றம் ஜலிங்கோ ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராஜினாமா
இந்த நிலையில் ஜலிங்கோ நிறுவனத்தின் இணை இயக்குனர் வெளியேறியதை அடுத்து தற்போது இந்நிறுவனத்தின் தகவல் தொடர்பு மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி நௌஷாபா சலாவுதீன் என்பவரும் ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது ‘உண்மை வெல்லும் என்று என்ற நம்பிக்கை தனக்கு இருக்கிறது’ என்று மட்டும் தெரிவித்தார்.
சுயமரியாதை
இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் மேலும் தெரிவித்த போதும் ‘இந்த பதவியில் நான் இருந்தபோது தனக்கு மிகப்பெரிய எதிர்ப்பு மற்றும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் உணர்ந்தேன். தொடர்ச்சியாக அவமதிப்புகளை எதிர்கொள்ளும் அபாயம் இருந்தால் இந்நிறுவனத்தின் பணியை ராஜினாமா செய்தேன். நான் இந்த நிறுவனத்தில் இருந்து விலகி சென்றால் மட்டுமே என்னுடைய தனிப்பட்ட சுயமரியாதை காப்பாற்றப்படும் என்பதால் வெளியேறினேன். இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய அனுபவங்களில் ஒன்று’ என்று கூறினார்.
நண்பர்கள் ஆறுதல்
மேலும் நான் இந்த பதவியில் இருந்து ராஜினாமா செய்த பிறகு எனது நெருங்கிய நண்பர்கள் எனக்கு மிகப்பெரிய ஆறுதல் அளித்தனர் என்றும், நான் தற்போது மிகச்சிறந்த நண்பர்களை சந்தித்து வருகிறேன் என்றும், என் மனம் ஒரு குழப்பமான நிலையில் இருக்கும்போது இந்த நண்பர்களின் சந்திப்பு எனக்கு மிகப்பெரிய ஆறுதல் அளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார். எனக்கு கிடைத்த ஆதரவுக்கு நான் மிகவும் நன்றியுடையவராக இருப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உண்மை வெல்லும்
மேலும் உண்மை எப்போதும் வெல்லும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும், வரும் நாட்களில் மேலும் சில விஷயங்களை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் என்றும் அப்போது பல உண்மைகள் வெளிவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த நிறுவனத்தில் உள்ள இன்னும் பல நபர்களுக்கு தன்னைப்போலவே அச்சுறுத்தல் இருப்பதாகவும் அது குறித்த தகவல்களும் விரைவில் வெளிவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தகவல் கசிவு
அதுமட்டுமின்றி தான் இந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறிய உடன் தன்னுடைய தனிப்பட்ட தகவல்கள் சமூகவலைதளத்தில் கசியவிடப்பட்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தொடர் வெளியேற்றம்
நல்ல லாபத்துடன் சென்றுகொண்டிருக்கும் ஜலிங்கோ நிறுவனத்தின் இணை இயக்குனர் மற்றும் தகவல் தொடர்பு அதிகாரி ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறி இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Startup Zilingo’s Communications Head Resigns After Co-Founder’s Exit
Startup Zilingo’s Communications Head Resigns After Co-Founder’s Exit | அடுத்தடுத்து வெளியேறும் முக்கிய அதிகாரிகள்: என்ன நடக்குது ஜிலிங்கோ நிறுவனத்தில்?