புதுச்சேரி : ‘தினமலர்’ நாளிதழை தொடர்ந்து படித்து வருவதால் பொது அறிவு போட்டியில் முதலிடம் பிடிக்க முடிந்தது’ என மாணவி ஜெய்சக்தி தெரிவித்தார்.
புதுச்சேரி ‘தினமலர்’ வழிகாட்டி நிகழ்ச்சியில் முதல் நாளில் நடந்த பொது அறிவு தேர்வு போட்டியில், லாஸ்பேட்டை ஜீவானந்தபுரத்தை சேர்ந்த, நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் அஜீத்குமார்,17 முதலிடம் பிடித்தார். அவருக்கு லேப்டாப் பரிசாக வழங்கப்பட்டது.இரண்டாம் நாளான நேற்று மாலை அமர்வில் பொது அறிவு குறுந்தேர்வு போட்டி நடந்தது.
இதில் புதுச்சேரி வாணரப்பேட்டை தமிழ்த்தாய் நகர் ராஜராஜேஸ்வரி வீதியை சேர்ந்த, அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவி ஜெய்சக்தி முதலிடம் பிடித்து, லேப்டாப்பை பரிசாக வென்றார். அவரது தந்தை தங்கமாரியப்பன்,45, தமிழ்நாடு மின் துறையில் உதவி பொறியாளராக பணியாற்றி வருகிறார். தாயார் சுமதி,42
.மாணவி ஜெய்சக்தி கூறுகையில், ‘சிறு வயதில் இருந்தே பொது அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து தேடலில் இருப்பேன். இதற்காக ‘தினமலர்’ நாளிதழை தொடர்ந்து வாசித்து வருகிறேன். இதன் மூலமாகவே பொது அறிவு போட்டியில் முதலிடம் பிடித்து லேப்டாப் பரிசாக வெல்ல முடிந்தது’ என்றார்.
Advertisement