எதிர்வரும் காலத்தில் நாட்டில் அரிசி ஒரு கிலோ கிராம் 1000 ரூபாவைத் தாண்டும் என ஐக்கிய நெல் உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒக்டோபர் மாதத்திற்குள் நாடு கடுமையான அரிசி தட்டுப்பாட்டைச் சந்திக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக அரிசியின் விலை ஆயிரம் ரூபாவை தாண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உடனடி நடவடிக்கை
இவ்விடயம் தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்தி பயிர்ச்செய்கைகளுக்கு உடனடியாக உரங்களை வழங்குமாறும் சங்கம் கேட்டுக்கொள்கின்றது.
கூடிய விரைவில் மாற்று உணவுப் பயிர்களை நோக்கி பொதுமக்கள் செல்ல வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.